விக்ரம் கூறி சென்றது போல் சிட்டியில் இருக்கும் பெண்களின் பிறந்தநாள் தேதியை விக்ரம் கொண்டு வந்து ஜீவாவிடம் கொடுத்தான். ஜீவா அதை வாங்கி இந்த மாதம் சித்திரை நட்சத்திரம் கொண்டு பிறந்தூள்ள பெண்ணின் பெயரை வட்டமிட்டு "நம்ம பாலோவ் பன்ன வேண்டிய பொண்ணு இவ தான்" என்று கூற விக்ரம் "பேசாம நீங்க போலீஸ் ஆகிடுங்க சூப்பரா ஐடியா கொடுக்றிங்க" என்று கூற ஜீவா புன்னகைத்தாள்.
விக்ரமும் ஜீவாவும் அந்த பெண்ணை கண்டுபிடித்து அவளுக்கே தெரியாமல் அவள் உடலில் ட்ராக்கிங் டிவைஸ்ஸை பொறுத்தி விட்டனர். அப்பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டே இருந்தவர் அவள் பிறந்தநாள் முடிந்ததும் அவள் காணாமல் போனதாக செய்தி கிடைத்ததும் இருவரும் அவர்கள் பொறுத்திய ட்ராக்கிங் டிவைஸ்ஸை பின்பற்றி சென்றனர்.
அது ஒரு பாழடைந்த வீட்டின் முகவரியை காட்டியது. வீட்டை சுற்றி காடு போல் மரங்களும் செடி கொடிகளும் புதர்களும் நிறைந்து கிடந்தது. சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வீடுகளே அற்ற இடம் அது.
இருவரும் அங்கு சென்று சேர்ந்ததும் விக்ரம் ஒருபுறமும் ஜீவா ஒரு புறமும் உள்ளே சென்றனர். விக்ரம் உள் நுழையும் போதே "நா மாட்டிகிட்டா கன் ஷாட் கொடுக்றன் உடனே நீ கிளம்பிடு என்ன பத்தி கவலைபடாத நீ எடுத்த வீடியோவ எடுத்துட்டு இங்க இருந்து கிளம்பிரு" என்று கூறி சென்றான்.
ஜீவாவும் உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு கண்ணை மூடி தன் தந்தையை நினைத்து பெருமூச்சு விட்டவள் உள்ளே சென்றாள். இருவரின் திட்டப்படி இருவரும் அவர்கள் கண்ணில் படுபவை அனைத்தையும் வீடியோவாக எடுக்க தொடங்கினர்.
ஜீவா சென்ற இடத்தில் ஏதோ கல்லை நடு அறையில் நட்டு வைத்து அதன் முன் மஞ்சள், குங்குமம், பூ, பழம், என்று பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வைத்து அதன் முன் பெரிய வட்ட வடிவில் கோலமிட்டு அதன் நடுவில் ஓம குண்டத்தையும் அதன் இருபுறமும் உட்கார சிறு முக்காலி வைக்கப்பட்டிருந்தது.
YOU ARE READING
உயிரே என்னுயிரே
Romanceதன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....