ப்ரணவ் சுடரை இனி பார்க்க போவதில்லை என்று கூறி சுடர் வீட்டில் இருந்து கிளம்பி விட்டான். அடுத்த நாள் காலை காவல் நிலையத்திற்கு கிளம்பி சென்றவனுக்கு அவன் அறையில் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
உள்ளே அவன் அறையில் சுடர் காலை உணவை மேசை மேல் பரப்பி வைத்து விட்டு ப்ரணவ்விற்காக காத்திருந்தாள். ப்ரணவ் சுடரை கண்டு அதிர்ந்தாலும் மனதளவில் பரவசம் பரவியது. அதை மறைத்துக் கொண்டு "நீ இங்க எதுக்கு வந்த .... நேத்தோட தான் நம்ம மீட் பன்ன வேணான்னு சொன்னன் இல்லை" என்று கடுகடுப்பாக கேட்க "நீ தான் என்னை பாக்க வர மாட்டன்னு சொன்ன நா சொன்னனா இல்லையே .... வா உனக்காக சாப்பாடு கொண்டு வந்திருக்கன் சாப்பிடு" என்று கூறி சுடர் அனைத்தையும் பிரித்து வைக்க துவங்கினாள்.
"எனக்கு எதும் தேவையில்லை எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்பு" என்று ப்ரணவ் கூற "ம்ச் ரொம்ப பன்னாத கவி உட்காரு சாப்பிடு" என்று சுடர் ப்ரணவ்வை இழுத்து அமர வைத்து இட்லியை பிய்த்து வாயில் தினித்தாள்.
ப்ரணவ் சுடர் கையை தட்டி விட்டு "நானே சாப்ட்றன்" என்று கூறி சாப்பிட தொடங்கினான். சுடர் புன்னகையுடன் சாப்பிடும் ப்ரணவ்வையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ப்ரணவ் சாப்பிட்டு முடித்ததும் அனைத்தையும் எடுத்துக் கொண்டவள் "சோ ... க்யூட் ... மதியம் பாக்கலாம்" என்று கூறி ப்ரணவ் கன்னத்தை கிள்ளி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
'மதியமா' என்று நினைத்த ப்ரணவ் அதை ஓரம் கட்டி வைத்து வேலையில் மூழ்கினான். மதியம் என்பதை உணர்த்தும் விதமாக கடிகாரம் ஒலி எழுப்ப மணியை பார்த்த ப்ரணவ் உடனே தனது வேலையை ஓரம் கட்டி வைத்து விட்டு சுடர் அங்கு வரும் முன் கிளம்ப வேண்டும் என்று பிரவீனையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
பிரவீன் எங்கே என்று கேட்டும் பதில் இல்லை ப்ரணவ் நேராக சென்று சஞ்சய் வேலை செய்யும் மருத்துவமணை முன் நிறுத்தினான். பிரவீன் ஆச்சரியமாக ப்ரணவ்வை பார்க்க ப்ரணவ் அதை கண்டு கொள்ளவே இல்லை.
YOU ARE READING
உயிரே என்னுயிரே
Romanceதன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....