3

680 78 12
                                    

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

இன்று நடந்தவையை மனதில் அசைப்போட்டபடி...
தலையணையில் தூக்கம் வராமல் படுத்திருந்தான்...கதிர்

தூங்கி இருப்பாளோ!??
என்ற சந்தேகத்தில்....
அவள் பக்கம் திரும்பி.... தூங்கிட்டியா??? என்றான்.

ஏதோ சிந்தனையில்...
இருந்து கலைந்தவள்
இல்லி....ங்க...ளே!!...
ஏன்???

ஒண்ணும் இல்ல.. சும்மா...தான்.

நீங்க தூங்கலையா!???

கழுத்து வரைக்கும் சாப்பாடு போட்டாங்க.... அப்புறம் எப்படி தூங்குறது....என்று எழுந்து அமர்ந்தான்....

லேசாக வெட்கத்துடன் சிரித்து...
எனக்கெல்லாம் பொறந்தநாள் கொண்டாடி....

ஐயோ!! கடவுளே...
ஒரே வெக்கமா போச்சு...

கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்தவள்...

மெதுவாக....
ஏங்க ரெண்டு டிஷ் Extra வா... சமைச்சதுக்கா...இவ்ளோ வெக்கம் இதெல்லாம் over ங்க..

ஹேய்!!!அது இல்ல..
இந்த கேசரி எல்லாம் Cut
பண்ணி ஒரு மாதிரி... ரொம்ப சந்தோசமா இருந்துச்சு....

இவ்ளோ வருஷம் என்னோட...
பொறந்தநாள் வர்றதும் தெரியாது...
போறதும் தெரியாது...
ஆனா இன்னைக்கு!!?...

இதுவே எனக்கு 2 வருஷம் தாங்கும்...
என்றான்...

Ohh என்றவளின் குரலில்....
"" ஸ்ருதி"" மிகவும் குறைவாக இருந்தது....

ஹேய்...!!என்னாச்சு?..

நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்... நீ ஒரு மாதிரி இருக்க..

ஒண்ணும் இல்லங்க..

ப்ச்... எப்பவும் நீதான் வள வள னு பேசுவ.... இன்னைக்கு என்ன.?..
உடம்புக்கு எதுவும் முடியலயா??

அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க.

அப்புறம்????

ஏன் கேக்குறேனா!!...
இந்த பொறந்த நாள் விஷேசம் எல்லாம்
நீ ஆரம்பிச்சு வச்சது தானே...
அதான் கேட்டேன்....

அது ஒண்ணும் இல்லங்க...
நான் நெனச்சது எதுவுமே...
கடைசி வர நடக்கலயே...
அதான் மனசு ஒரு மாதிரி இருக்கு...

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now