💜 K💞M 💜
Part (3-3)
கடற்கரை மணலில் அருகருகே அமர்ந்தபடி தூரத்து கடல் அலையை வேடிக்கை பார்த்தவாறே இருந்தனர் இருவரும்...
எங்கிருந்தோ பறந்து வந்த பெரிய ரப்பர் பந்து முல்லை💞யின் பாதங்களை வந்தடைய..அதை துரத்தி வந்த சிறுமியிடம் அதை ஒப்படைத்து...
என்ன..?ங்க ரொம்ப நேரமா அமைதியாவே இருக்கீங்க.... என்றாள்....
சுண்டல் வேணுமா...?என்ற சிறுவனிடம் மறுப்பாய் தலை அசைத்தவன்....
சுருதி குறைவான குரலில்.... ஒண்ணும் இல்ல... சும்மா தான்...
என்றான் கதிர்.ஒண்ணும் இல்லனு நீங்க சொல்ற விதத்துலயே தெரியுது..என்ன.?ன்னு சொல்லுங்க....
-----------------------
சிறு அமைதி....
-----------------------அ...து....
டாக்டர் சொன்னத பத்தி நினைச்சிட்டு இருக்கீங்களா..???
ம்ம்ம்...ஆமா
அண்ணன் அண்ணி விஷயமா...
நாம நினைக்கிறது தப்பா..?சரியா..?அப்டியே... நாம நினைக்கிறது சரியாவே இருந்தாலும்.... இத எப்படி..? அவங்கள ஒத்துக்க வைச்சு ...ஹாஸ்பிடல்..க்கு கூட்டிட்டு வர போறோம்னு ஒரே யோசனையாவே இருக்கு..
இதுல யோசிக்க என்ன??
இருக்கு..ங்க.டாக்டர் கூட சொன்னாங்க
பார்த்தியா..!!சம்மந்தபட்டவங்க இல்லாம... நீங்க வந்து பேசி என்ன?? செய்யிறதுனு கேட்டாங்கல..!!
Hmmm.....
பெருசா முடிவு பண்ணி...ஹாஸ்பிடல் வரைக்கும் போய்ட்டு வந்தாச்சு....
ஆனா..அவங்க 2 பேர் இல்லாம நாம போய் பேசுனதுல என்ன? பெரிய பலன் கிடைக்க போகுதுனு தெரியல..
எனக்கு என்னமோ..வெறும் கவுன்சிலிங் போய்ட்டு வந்த மாதிரியான உணர்வு தான் இருக்கு..
--------------------
சிறு அமைதி....
--------------------எங்களுக்காகவே..இவ்வளவு நாள் வாழ்ந்து.. எங்கள பத்தியே வாழ்க்கை முழுக்க யோசிக்கிறவங்களுக்கு... எங்களால என்ன? பண்ண முடியும்...