K💞M
OS💞
அவனையும் கணக்கு நோட்டையும் (கடுப்புடன்..)பார்த்து கொண்டு....
என்ன..ங்க...என்றாள்.கணக்கில் கவனத்தை வைத்த படி... நிமிராமல்...
ம்ம்ம் என்ன??? என்றான்.முடிஞ்சிதா.???
ஆஹான்..
இதோ..5 நிமிஷம்...ஒன்ற மணி நேரமா.. இத தான் சொல்றிங்க..என்றாள் தன் நகத்தை பார்த்து கொண்டு...
பதில் பேசாமல் கணக்கில் ஆழ்ந்தான்....
ப்ச்... என்ற படி நிமிர்ந்து.... மின் விசிறியை பார்த்து..அறையை முழுக்க பார்வையை ஓட விட்டு... தன் காலில் உள்ள மெட்டியை சுழற்றியபடி...15 நிமிடம் கடந்த நிலையில்....
கழுத்தை சாய்த்து கொண்டு..
அவனை பார்த்து மீண்டும்...
என்னங்க.. என்றாள்...ம்ம்ம்....
ஆச்சா....???
இன்னும் கொஞ்சம் தான்...
நீ தூக்கம் வந்தா...வேணும் னா...
படுத்துக்கோ...!!தூக்கம் வ...ந்...தா......வா...!!???
என்று முனகியபடி அவனை கோவமாக பார்த்தாள்...அனல் மூச்சு காற்றை வெளியிட்டு ... எனக்கு லைட் எரிஞ்சா.. தூக்கம் வராதுங்க...
இதோ.. இதோ...
இன்னும் 5 நிமிஷம் தான்...பொறுமை இழந்தவள்... அப்படி என்ன கணக்கு தான் பாக்குறிங்க....
இல்ல அது...
இந்த கணக்குல..ஒரு 400 ரூபாய் ரொம்ப நேரமா இடிக்குது..
(தலை முடியை பென்சிலால் தேய்த்து கொண்டவன்...)அதான் பாத்துட்டு இருக்கேன்...எங்கே இப்படி கொண்டாங்க.. பாப்போம்...
இரு இரு...
இதோ...!!!
இப்போ கண்டு பிடிச்சிடுவேன்..