இளமதி கூறிய சொர்ணக்கா அந்த உண்மையான சொர்ணக்காவைவிட பல மடங்கு இருந்தாள். அவள் வாய்க்கு அந்த ஊரே பயந்து இருந்தது. தரம் இரங்கி பேசுவதில் அவளை மிஞ்ச வேறு யாராலும் முடியாது. கேட்கிறவர்கள் வாழ்க்கையை வெறுக்கிற அளவுக்கு இறங்கி அடித்தாள் வந்திருக்கிறவன் எதற்காக வந்திருக்கிறான் என்று தெரியாமலே!
ஆத்ரேயன் சும்மா தேஜாஸ்ரீயின் தங்கையை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தான். வந்த இடத்தில் அவள் என்னவோ உறவுமுறை வைத்து அழைத்து அவனுக்கு அதிர்ச்சியை கொடுக்க, அவளை மிஞ்சும் அதிர்ச்சியை இந்த சொர்ணக்கா கொடுத்தாள் அந்த சின்ன பெண்ணை வார்த்தையால் கூறு போட்டு. அந்த சொர்ணாக்காவின் உண்மையான பெயரே சொர்ணாவாமாம்.
"என்ன இந்த லேடி இப்படி பேசுது?" என்று தனக்கு பின்னே நின்றிருந்தவளை லேசாக திரும்பி பார்த்து கேட்டான் ஆத்ரேயன்.
"அப்படித்தான் பேசும் அந்த யானைக்குட்டி. அதையெல்லாம் காதுக்கு உள்ளே கொண்டு போக கூடாது. ம் தைரியமா பேசுங்க. என்னை இங்கே விட்டுட்டு போக முடியாதுன்னு அடிச்சு பேசுங்க. இந்த யானைக்குட்டிக்கு போலீஸ்ன்னு சொன்னா கூட பயம் வராது." என்று அவள் ஹின்ட் கொடுக்க 'இவளை எங்கே கூட்டிட்டு போக சொல்றா?" என்று மனதிற்குள் நினைத்தான் ஆத்ரேயன்.
அவன் அப்படி நினைக்கவும் இன்னொரு மனது "இவளை இங்கே இப்படியே விட்டுட்டு எப்படி போக முடியும்?" என்றும் கேட்டது.
"பேசி பார்க்கிறேன்" என்று இருவரும் இரகசியமா பேசிக்கொண்டு இருக்க சொர்ணாக்கா டென்ஷன் ஆகி போனாள்.
"மதமதப்பு பிடிச்சவளே! உனக்கு என்ன திமிரு இருந்தா எவன் பக்கத்திலேயோ நின்னுட்டு சொல்ல சொல்ல இந்த பக்கம் வராம இருப்ப? உன்னை..." என்றவள் சுற்றும் மற்றும் பார்த்துவிட்டு வெளியே வரண்டாவை பெருக்க வைத்திருந்த குச்சி விளக்குமாற்றை எடுத்துக்கொண்டு இளமதி பக்கத்தில் வந்து அவளை அடிக்க போனாள். இளமதியோ நடுவில் நின்றிருந்தவனை சுற்றி சுற்றி தப்ப பார்த்தாள். ஆனால் சொர்ணக்கா அவள் காலில் இரண்டு அடி அடித்துவிட்டாள்.