அத்தியாயம் - 13

1.8K 117 14
                                    

விருந்தாளியாக  வந்த வீட்டில் கையை நனைக்காமல் போகக்கூடாது என்று நினைத்து ஆத்ரேயன் சாப்பிட சென்றான்.  வீட்டு பெண்ணாக எல்லோரையும் பார்த்து பார்த்து கவனித்தாள் இளமதி. 

"இவளை பார்த்தாவது கத்துக்க. பொண்ணுன்னா இப்படி இருக்கணும். கட்டிக்க போறவனை ராஜா மாதிரி பார்த்துப்பா.  உன்னை கட்டிக்க போறவன் உனக்கு கூஜாதான் தூக்க வேண்டும்." என்றார் பொன்மணி மகளைப்பார்த்து.  

அடக்கம் ஒடுக்கமான மகளைத்தா என்று ஒரு தெய்வம் விடாமல் வேண்டினேன்.  ஆனால் அந்த தெய்வத்துக்கு எல்லாம் காதில் கொஞ்சம் கோளாறாக இருந்திருக்கிறது. என்னை அடக்குற மகளை தந்து ஏண்டா இவளை பெத்தொமுன்னு நினைக்க வச்சுட்டா. ஒத்தை பிள்ளையை வச்சிருக்கேன், அதுவும் பெண் பிள்ளையை.  அது துணைக்கு துணையாக இருக்குமுன்னு பார்த்தா, அசலூரில் போய் இருந்துக்கொண்ட அந்த பிள்ளைக்கு நான் துணைக்கு ஆள் தேடவேண்டியதா உள்ளது.' என்று சதா புலம்பும் தாய் இந்த தாய்.  

அவரின் புலம்பலின் சத்தம் தாங்காமல் இளமதியை தன் மகளுக்கு துணையாக அந்த தெய்வம் அனுப்பி வைத்திருக்கிறது என்று நம்பினார் அவர்.  அதனால் எப்போதும் இளமதியை தூக்கி வைத்தே பேசுவார். முதலில் கோபம் வரத்தான் செய்தது மொக்ஷிக்காவுக்கு.  பிறகு இந்த அம்மாவுக்கு வேற வேலை இல்லை என்று நினைத்து அவரின் பேச்சை காதில் போடாமல் இருந்துக்கொண்டாள்.

ஆனால் இன்று தன்னுடன் வேலை செய்கிறவர்கள் முன்னே வைத்து தனது தாயார் இப்படி கூறவும் சற்று அதிகப்படியான கோபம் வந்தது மொக்ஷிக்காவுக்க்கு.  

"எனக்கு கூஜா தூக்க வைக்கிற திறமை இருக்கு, நான் தூக்க வைக்கிறேன். பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுறதில் என்ன தப்பு? இவள் குனிந்து குனிந்து நிமிர முடியாமல் கழுதை போல பொதி சுமக்க தயார் என்றால் அதை தடுக்க யாரால் முடியும்.  பிறருக்காகவே பிறப்பெடுத்தது போல ஒரு பிறவி." என்றாள் மொக்ஷிக்கா.

"இப்போ என்னை எதுக்காக வம்புக்கு இழுக்கிறிங்க? அவரவர் தகுதிக்கு ஏற்றார் போலத்தான் இருக்க முடியும். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியாது." என்று கூறிவிட்டு இளமதி உள்ளே சென்றுவிட்டாள்.  அதன் பிறகு அவள் தன் அறையைவிட்டு வெளியே வரவே இல்லை.  

மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனாWhere stories live. Discover now