அத்தியாயம் - 6

1.8K 112 7
                                    

'உறவும் இல்லை, எனக்கு உயிரும் இல்லை. எதற்கு இந்த வாழ்வு? அகிலத்தில் இருக்கும் எதையும் கேட்கவில்லை நான். அன்பை மட்டுமே கேட்டேன். அதுவும் இல்லாமல் போய்விட்டதே!' இந்த மாதிரி எண்ணம்தான் இளமதி மனதில். உள்ளம் சோர்ந்து சோபாவில் தலையை சாய்த்திருந்தவளை ஆறுதலுடன் வருடிக்கொடுத்தாள் மொக்ஷிகா.

"எழுந்திரு. உள்ளே வந்து படுத்துக்க." என்றாள்.

"என்னவோ தெரியலக்கா, மனசுக்குள்ள ஒரே பயமா இருக்கு. ஆதி சார் எதுக்காக என்னை இப்படியே விட்டுட்டு போயிட்டாரு?" என்று கேட்டாள் இளமதி தலையை உயர்த்தி.

"அவன் உன் கூடவே வரமுடியாதே! நீயும் அவன் கூட போக முடியாது. ஏன்னு உனக்கு சொல்லனுமா என்ன? அவன் ஒரு ஆண், நீ ஒரு பெண். அதையும் தாண்டி உன்னை அவனுடனே வச்சுக்கனுமுன்னா அதுக்கு எதாவது ஒரு ஸ்ட்ராங் ரீஷன் வேணும்தானே! அப்படி எதுவுமே உனக்கும், அவனுக்கும் இடையே இல்லையே! என் பிரெண்ட்ன்னு சொல்லல நான். அவன் இவ்வளவு உதவி செய்ததே பெருசு. அதுக்கு ஒரு நன்றியை சொல்லிட்டு இனி நம்ம எதிர்காலத்தை நாம்தான் பார்த்துக்கணும். ரொம்பவும் எல்லோரையும் டிபன்ட் பண்ணி இருக்க கூடாது. நம்மை நம்மளைவிட பத்திரமா, பாதுகாப்பாக பார்த்துக்க யார் இருக்கா சொல்லு." என்று மொக்ஷிகா எடுத்து கூற இளமதி கொஞ்சம் தெளிந்தாள்.

மொக்ஷிகாவை அவளுக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டது ஒரு காரணத்துக்காக. சொந்த காலில் நிற்க சொல்கிறாளே அதனால். மெல்ல சமாதானம் ஆனவள் எழுந்து சென்றாள்.

"எங்கே படுக்கணும் அக்கா?" என்று இளமதி கேட்டுக்கொண்டு அங்கே இருந்த ஒரு கட்டிலை பார்த்துகொண்டு நின்றாள்.

"இங்கேதான்." என்றாள் மொக்ஷிகா.

"ஆனா இங்கே ஒரு கட்டில்தானே இருக்கு." என்றாள் இளமதி.

"ஒரு ஆளுக்கு ஒரு கட்டில் போதாதா என்ன? இவ்வளவு நாள் நான் தனியாகத்தான் இருந்தேன். அதனால ஒரு கட்டில்தான் இருக்கு. இன்னைக்கு நீ இங்கே வந்தது திடீர் முடிவு. உடனே போய் கட்டிலை வாங்க முடியுமா என்ன? அதுவும் இல்லாமல் அடுத்து என்ன பிளான் உனக்குன்னு தெரியாது. எதுக்காக பணத்தை கொண்டு வீண் பண்ணிட்டு. பணம் என்பதைவிட வீட்டை அடைச்சிட்டு கிடக்கும் அதெல்லாம். பெரிய கட்டில்தானே! நாம இரண்டு பெரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்." என்றாள் மொக்ஷிகா.

மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனாWhere stories live. Discover now