அத்தியாயம் - 14

1.9K 123 15
                                    

"எப்படி உன்னை தனியா விட்டுட்டு போக முடியும்.  நீயும் என் கூட வா." என்று மொக்ஷிக்கா கூற அவளை பார்த்து சிரித்தாள் இளமதி.

"ஏய் என் முட்டாள் அக்கா. நடக்குற காரியத்தை பேசு. ஏற்கனவே அஸ்வத் என் மேலே ரொம்ப கோபத்துல இருக்குறதா தகவல் வந்துச்சு." என்றாள் இளமதி.  

"அதெல்லாம் சும்மா யாரோ புரளியை கிளப்பி விட்டிருக்காங்க. என்னை விட அவருதான் உன்னை நினைச்சு ரொம்ப கவலைப்படுறாரு.  நான் ப்ளஸ் டூ முடிக்கிற வரை அம்மா கைக்குள்ளே இருந்தவ.  அப்புறம் காலேஜ்ன்னு சிட்டிக்கு வந்து திரும்ப ஊருக்கு போய் செட்டில் ஆகுற ஐடியாவே இல்லாம இங்கேயே வேலையை தேடிகிட்டேன்.  படிச்ச படிப்புக்கு இங்கேதான் வேலை இருக்கு.  அதுக்காக மட்டும்தான் இந்த சிட்டி வாசம்.  மற்றப்படி எனக்கு ஊரு ரொம்ப பிடிக்கும்.  அதனால எல்லாம் இருந்தும் எனக்கு தனியா இருக்கிற மாதிரியே பீல் ஆகும்.  அதை சொல்லி அடிக்கடி அஸ்வத்ட்ட புலம்புவேன்.  நீ வந்த பிறகுதான் அந்த புலம்பல் நின்னிச்சு. துணைக்கு துணை, பாசம் காட்ட சளைக்காதவ, சண்டை போட சரியான ஆளு, வேலை பளுவை குறைக்க உதவியவன்னு நீ எனக்கு எல்லாமா இருந்த.  அது அஸ்வத்க்கு தெரியும்.  நீ வந்த பிறகுதான் நான் சந்தோசமா இருக்கிறதை பார்த்து அவன் நிம்மதியா இருந்தான்.  அதனால அவன் ரொம்பவே கவலைப்படுறான் உன்னை நினைச்சு." என்றாள் மொக்ஷிக்கா.

"சரி சரி.  மாத்தி மாத்தி எல்லாருமே என்னை நினைச்சு கவலைப்படுறதை விட்டுட்டு உங்க வாழ்க்கையை பாருங்க. மரத்தை வச்சவன் தண்ணியை ஊத்துவான்.  நான் வேணா படிப்பை இடையிலேயே விட்டுட்டு அம்மா கூட இருந்துக்கவா.  அவங்களும் ரொம்ப சந்தோசப்படுவாங்க உங்க  இடம் நிறைஞ்சா." என்றாள் இளமதி ஆர்வமாக.

"நீ எப்போ எப்போன்னுதானே இருக்க படிப்பை மூட்டை கட்ட. இப்போ உனக்கு இந்த படிப்பு ஒரு சுமையா இருக்கலாம்.  ஆனால் எதிர்காலத்தில் என்னை நிச்சயம் நினைச்சிப்பார்ப்ப இதை உனக்கு வலுகட்டாயமாக நான் கொடுத்ததின் காரணத்தை.  பொண்ணுங்க எல்லாத்துக்குமே ஆண்களை நம்பி இருந்தா கடைசி வரை அவங்கட்ட யாசகம் கேட்டும் நிலையில்தான் இருப்போம்.  ஏதோ ஒரு  காரணத்தால நாம தனிச்சு வாழுற நிலைமை வந்தா இந்த படிப்பு மட்டும்தான் நமக்கு கை கொடுக்கும்." என்றாள் மொக்ஷிக்கா.

மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனாOù les histoires vivent. Découvrez maintenant