அத்தியாயம் - 21

1.6K 100 9
                                    

வார்த்தைகள் வேண்டாம், வாக்குவாதம் வேண்டாம், சண்டை வேண்டாம்.  இவை செய்யும் அனைத்தையுமே செய்துவிடும் உனது மௌனம்.  என்று நினைத்தான் ஆத்ரேயன் இளமதியின் முகம் இருந்ததை பார்த்துவிட்டு.  மலர்ந்த பூவாக இருந்தவள் வாடி வந்தங்கி காணபட்டாள். நிமிர்ந்து கேமிராவுக்கு தன் கண்களையே காட்ட மறுத்தாள்.  இவளை வைத்து இந்த விளம்பரத்தை எடுத்தால் சரிப்பட்டுவராது என்று சகாயத்துக்கு தெரிந்துவிட்டது.  அவருக்கு அந்த ஜொள்ளு மேல்தான் கோபம் வந்தது.  

மெல்ல ஆத்ரேயனிடம் வந்தவர் "என்ன தம்பி இதெல்லாம்? இந்த பொண்ணு இப்படி சொதப்புது?" என்றார்.  

"இவதான் வேணுமா? இவ இனி அசையமாட்டா. இனி என்ன பேசினாலும் இப்படித்தான் இருப்பா? நான் வேணா வேற மாடலுக்கு ஏற்பாடு செய்யவா?" என்று கேட்டான் ஆத்ரேயன்.  

"வேற மாடலுன்னா பணம் அதிகமா செலவாகுமுன்னுதான் இந்த பொண்ணை கூட்டிட்டு வந்தேன்." என்றார் அவர்.

"பரவாயில்லை, நான் பார்த்துக்குறேன்.  எனக்கு நீங்க எந்த பணமும் தரவேண்டாம்." என்றவன் வேற மாடலுக்கு போன் செய்தான். இளமதிக்கு தெரியாமல் அவளை சில போட்டோக்கள் வேறு எடுத்துக்கொண்டான்.  

"நீ கிளம்பு" என்றான் விவரத்தை கூறிவிட்டு. 

"இல்ல, நான் நடிப்பேன்." என்றவள் நிமிர்ந்து அவனை பார்த்துவிட்டு 

"அக்காவும் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பாள" என்று இவனிடம் கேட்டாள்.  இவன் இப்போதுதான் கயல்மதியின் நினைவில் இருந்து கொஞ்சம் வெளியே வந்திருக்கிறான். இவனிடம் இப்படி இளமதி கேட்கவும் 

"கிளம்புன்னு சொன்னேன்" என்றான்.  அவள் சோர்வாக எழுந்து நிற்க 

"டிரஸ் மாத்திட்டு என் ரூம்ல போய் இரு." என்றான்.  

"பரவாயில்லை.  நான் கிளம்புறேன்." என்று அவள் தளர்ந்த நடையுடன் நடக்க அவளையே பார்த்தவன் 

"குமார் இவளை ஹாஸ்டலில் கொண்டுவிட ஏற்பாடு செய்துவிட்டு வா" என்றான்.  இவன் காரை மறுத்துவிட்டு அவள் ஆட்டோவில் சென்றுவிட்டாள்.  போகும் வழியில் எல்லாம் அவன் பேசியதே மனசில் வந்து வந்து போனது.  

மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனாOnde histórias criam vida. Descubra agora