அத்தியாயம் -33

1.4K 88 3
                                    

ஒரு காமெடி உண்டு. லவ் மேரேஜ் பெட்டரா? இல்லை அரேன்ஞ் மேரேஜ் பெட்டரான்னு கேட்டா 'தூக்கு போட்டு செத்தா என்ன? விஷத்தை கொடுத்துட்டு செத்தா என்னன்னு. அந்த அளவுக்கு திருமண வாழ்க்கை ஒன்றும் மோசமில்லை. அதுவரைக்கும் ஒரு மதிப்பு மரியாதை என்று தனியாக அலையும் மொட்டை பசங்களுக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்துவிட்டால் என்ன மரியாதை! மாப்பிள்ளை என்ற அந்தஸ்த்து, என் புருஷன் என்று உரிமை கொண்டாடும் ஒரு பெண்ணின் தனி கவனிப்பு, அதற்கு அடுத்தார் போல கொஞ்ச நாளென்றாலும் என் அப்பா என்று சொல்லும் பிள்ளைகள்! இதெல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டப்ப்ட்டுதானே ஆகவேண்டும்.

ஆனால் ஆத்ரேயன் அந்த கஷ்டத்தைக்கூட பட்டது போல தெரியவில்லை. இயற்கை அழகோடு ஜொலிக்கும் மனைவி. அவள் முகத்துக்கு இவன் விரும்பியது போல எந்த மேல் பூச்சும் பூசிக்கொள்வது இல்லை. மேக்கப் மட்டுமில்லை, இவனுக்கு பிடிக்காத எதையுமே அவள் செய்யமாட்டாள்.  அது ஒரு பக்கம் என்றால் இவனை ஒரு குழந்தையை பார்ப்பது போல பார்த்துக்கொள்வாள்.  

"ஏண்டி இப்படி ஓடுற?" என்றாலும்  கேட்கமாட்டாள்.  இவளை திருமணம் செய்த பிறகு ஒரு டீ காஃபி கூட அவன் வெளியே குடித்தது இல்லை.  இவன் மேல் இருந்து எப்போது எழும்பி போவாள் என்றே தெரியாது.  

"இளா" என்று இவன் கண்ணை திறக்காமலேயே கத்துவான் தினமும் காலையில் இரவில் தன் இருந்தவளை இருந்தவளை காணாமல்.  

"வந்துட்டேன்" என்று ஓடிவருவாள்.  ஓடி வந்து அவன் மேல் படுத்துக்கொண்டு "சீக்கிரம் ரே.  அடுப்பில் தோசை இருக்கு" என்று எதாவது சொல்லுவாள்.  

"இருந்துட்டு போகட்டும்" என்றவன் அவளை முத்தமிட்டே எழுந்து போவான்.  உடற்பயிற்சி, குளியல் எல்லாம் முடித்துவிட்டு வந்தால் உடை தயாராக இருக்கும்.  அவன் அதை கையில் எடுக்கும் முன்னாடி ஓடி வந்து அவனின் தலையை துவற்றி அவனுக்கு உதவி செய்துவிட்டு போவாள்.  அவன் தயாராகி வெளியே வரும் முன் சுட சுட டிபன் ரெடியா இருக்கும்.  மதியம் சாப்பாடு ரெடியாக இருக்கும். அத்தனையையும் அவள் இவனுக்கு செய்துவிட 

மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனாWhere stories live. Discover now