"இவட்ட போய் கேட்டேன் பாரு" என்று தன்னை நொந்துக்கொண்டு இருந்தான் ஆத்ரேயன் மொக்ஷிக்கா கூறியதை கேட்டு. பின் சீட்டை திரும்பி பார்த்தான். இளமதி நல்ல தூக்கத்தில் இருந்தாள். அவள் கண் மூடி தூங்கும் அழகே இவனை அலைகழிக்க சட்டென்று திரும்பிக்கொண்டான்.
"ச்சீ எதுக்கு இப்படி புத்தி புல் மேய போகுது? இவளை என்ன செய்ய?" என்று அவன் யோசித்துக்கொண்டே இருக்க போன் ஒலித்தது.
"ஹலோ" என்றான் இவன் மொக்ஷிக்கா என்று தெரிந்துக்கொண்டு.
"ஆதி அவளை ஹாஸ்டல் கூட்டிட்டு போ. வார்டனிடம் பேசிட்டேன், இவ பிரெண்ட் கூடவும் பேசிட்டேன். வார்டனிடம் யாரோ இவளுக்கு தெரியாம போதையை கலந்து கொடுத்துட்டாங்கன்னு சொல்லியிருக்கேன். அதையே மெயிண்டன் பண்ணு." என்றாள் மொக்ஷிக்கா.
"வேண்டாம். இந்த நிலையில் இவளை எப்படி தனியாவிட? யாரு எப்படின்னு நாம என்ன பார்த்துட்டா இருந்தோம்?" என்றான் அவன். அவனுக்கு அவன் பயம். இந்தமாதிரி நிறைய பார்த்திருக்கிறான் அவன். போதையில் எத்தனை பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள் என்று கண் கூடாக பார்க்கிறவன்.
"இப்படி பேசினா எப்படி? யாரையாவது நம்பித்தான் ஆகணும் ஆதி. எல்லோரையும் கெட்டவங்களா பார்த்தா அப்புறம் எப்படி சமாளிக்க. யாரையும் நம்மாவிட்டா நீதான் அவளை உன் மடியில் வச்சிக்கணும். எதனால இப்படி நீ யோசிக்கிறன்னே எனக்கு தெரியல. அன்னைக்கும் அப்படித்தான் பண்ணியிருக்க. அவளுக்கு எதிலாவது பயம், தயக்கம் இருந்தா அதை மாற்ற நினைக்காமல் கூட கொஞ்சம் பயத்தை காட்டி அவளை முடக்கி போட்டுடுற. அத்தனை தூரம் விளம்பரத்தில் நடிக்க ஆசையா வந்தவளை உற்சாகப்படுத்தி நடிக்க வைக்காமல் அதையும், இதையும் சொல்லி அனுப்பி வச்சிட்ட. அத்தனை பெரிய திறமையை உள்ளே வச்சிருக்கா, அதை அப்படியே தூசியடைய விட்டாச்சு. அவளை எழும்பவிடு ஆதி. ஒரு நண்பனா பழக நீ ஒகே. ஆனா மற்றப்படி நீ ஒரு ஆணாதிக்கம் பிடித்தவன்." என்றாள் இளமதி.