அத்தியாயம் - 27

1.9K 110 14
                                    

தங்கள் திருமணம் முடிந்த அளவில் ஆத்ரேயனுக்கு மிகவும் சந்தோசம். அப்பாடி என்று அவன் நிம்மதி பெருமூச்சுவிட முடியாத அளவுக்கு அவனுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில் சிறு சிறு பிரச்சனை அவன் மனைவிக்கு. பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. ஆனால் அதை நாம் பார்க்கும் பார்வையில்தான் அது பிரச்சனையா இல்லை சாதாரணமான விசயமா என்று தெரியும்.

இளமதி பக்கம் இருந்து அவளுக்கு தேவைனான அனைத்தையும் மொக்ஷிக்காவின் குடும்பம் செய்து கொடுத்தது. இரண்டு வருடம் பழகிய பழக்கத்துக்கு ஒரு குடும்பம் இவ்வளவு செய்யுமா என்று ஆச்சரியப்பட்டு போனாள் இளமதி. அவர்கள் அன்பு அவளை நெகிழச்செய்தது. பக்கத்தில் இருப்பவனை பழிவாங்குகிறேன் பேர்வழி என்று இவர்களை எல்லாம் ஒதுக்கி வைத்தோமே, மனம் நோக பேசினோமே என்று நினைத்து குற்ற உணர்வில் இளமதிக்கு அழுகை வந்தது.

"என்னாச்சு?" என்று கேட்டான் ஆத்ரேயன் மணமேடையில் இருக்கும் போதே தாலி கட்டும் முன்னாடி.

"ஒன்னுமில்லை. எனக்கு புத்தியே இல்லை" என்றாள் இவள்.

"அதுதான் எனக்கு தெரியுமே!" என்று அவன் கேலி பேசவும் இவள் யாருக்கும் தெரியாமல் அவன் இடுப்பில் கிள்ள அவன் நெளிந்தான். சும்மாவே போய் தொலையுங்கள் என்று கடைமைக்காக இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் ஆத்ரேயனின் அக்கா மார்களுக்கு இதை பார்க்கும் போது பத்திக்கொண்டு வந்தது. இளையவர்கள் இருவரும் சும்மா இருக்க மூத்தவள் வந்து நாத்தனார் இலக்கணத்தை செவ்வனே செய்துவிட்டு போனாள்.

"ஏய் இதோ பாரு, சபையில அடக்கம் ஒடுக்கமா இருந்து பழகு. இது உன் குடும்பம் மாதிரி இல்லை பல்லை கண்ட இடத்தில் காட்டிட்டு நிற்க" என்று இளமதியின் காதை கடித்துவிட்டு போனாள் அவள்.

அவள் அவ்வாறு கூறிவிட்டு விலகி செல்லவும் இளமதி அடிபட்டது போல பார்த்தாள் பக்கத்தில் இருப்பவனை. கல்யாணம் என்று ஏற்பாட்டை ஆரம்பித்த நேரத்தில் இருந்து பயத்தோடு இருந்த வீர பெண் புலிதான் இவள். அதனால் இப்போது அவள் முகத்தில் தெரிந்த பாவனையை ஆத்ரேயன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனாWhere stories live. Discover now