அத்தியாயம் -32

1.7K 105 7
                                    

நாளை மகனும், மருமகளும் சென்னை கிளம்புகிறார்கள்.  இரண்டு நாளுக்கு முன்னாடியே கற்பகத்தின் முகம் சோர்ந்து போய்விட்டது.  மகன் பத்து வருடமாக வந்து போய்தான் இருக்கிறான் என்றாலும் இந்த முறை நடந்த கலாட்டா, கல்யாணம்,   அதை தொடர்ந்து நடந்த நிகழ்வு என்று மகனை கண் முன்னே பல நாட்கள் பார்த்துவிட்டு அவனை பிரிய போவது ஒரு புறம் கவலை என்றால் அவனுக்கு என்று வாய்த்தவளை நினைத்து ஒரு புறம் கவலை. இந்த பதினைந்து நாளில் அவள் இந்த வீட்டில் ஒரு துரும்பை கூட அசைக்காமல் இருந்தது ஒரு கவலை, இவள் சென்னைக்கு போய் மகனை எப்படி பார்த்துக்கொள்வாள் என்ற பெருங்கவலை அவரை தூங்க விடாமல் செய்துக்கொண்டு இருந்தது. தெருவில் நடந்த கோல போட்டியில் இவரின் மருமகளும், பேத்தியும் முதல் பரிசை வாங்கிக்கொண்டு வந்தார்கள்.  அப்போதுதான் இவளுக்கு கோலம் போட தெரியும் போல என்று நினைத்துக்கொண்டார் கற்பகம்.  இந்த ரீதியில் இவன் தன் மகள்களிடம் புலம்பிக்கொண்டு இருக்க, அவர்கள் தங்கள் பங்குக்கு இளமதியை கழுவி ஊத்திக்கொண்டு இருந்தார்கள்.  

அப்போது அங்கே சென்ற இளமதி "அத்தே" என்றாள்.  திருமணம் முடிந்த பிறகு இதுதான் அவள் முதல் முறை உறவு முறை சொல்லி மாமியாரை அழைப்பது.  அவள் அப்படி கூப்பிடவும் கற்பகம் இவளை பார்த்தார்.  'இவள் இப்படியெல்லாம் வரமாட்டாளே! அவன் வீட்டில் இல்லையோ' என்று நாத்தனார்கள் பேசிக்கொண்டார்கள்.  ஆத்ரேயன் நாளை புறப்பட தேவையான பொருட்களை வாங்க போயிருந்தான்.  

"என்ன?" என்றார் கற்பகம்.  அதில் கோபம் இருந்தது.  இப்படி எதையுமே செய்ய தெரியாத ஒரு மண்ணை மகன் கட்டிக்கொண்டானே என்ற மாமியாரின் கோபம் அது.  

"அத்தே இன்னைக்கு நான் சமைக்கவா?" என்று கேட்டாள் இளமதி.  

"நீ சமைக்கிறியா?" என்று கற்பகம் ஆச்சரியமாக கேட்க 

"சரின்னு சொல்லு, சரின்னு சொல்லு" என்று மகள்கள் செய்கை காட்டினார்கள்.  

"சரி" என்றார் கற்பகமும்.  

"அதான் உன் மருமக சமைக்கிறேன்னு சொல்லிட்டாளே! அப்புறம் உனக்கு இங்கே என்ன வேலைம்மா? என் வீட்டுக்கு வா.  அங்கே நீ வந்து எத்தனை நாளா ஆயிடிச்சு." என்று தாயாரை வலுகட்டாயமாக தள்ளிக்கொண்டு போனார்கள் மூவரும்.  சமையலறையில் உதவிக்கு இருந்த பெண்ணுக்கும் அவர்கள் ஒரு வேலையை கொடுக்க 

மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனாWhere stories live. Discover now