அத்தியாயம் - 36

1.8K 84 2
                                    

கையில் விவாகரத்து பேப்பருடன் அப்படியே இருந்தாள் இளமதி. இவள் விவாகரத்து கொடுப்பாள் என்று நினைத்து வந்த அவர்களைதான் முட்டாள்கள் என்று சொல்ல வேண்டும்.

ஆத்ரேயன் மேல் இந்த முட்டாள் இளமதிக்கு இருந்தது காதல் என்று அவள் எப்போது உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. அவனை பிடிக்கும், அவனை மட்டும்தான் பிடிக்கும். அவன் பக்கம் இவளும் போகமாட்டாள், வேறு யாரும் போக கூடாது. அப்படியே இருக்க முடியுமா? இருவருக்கும் இடையே அப்படி இப்படின்னு சிறு நெருக்கம் வந்த நேரத்தில்தான் அந்த நர்ஸ் நார வாயை வைத்து விளையாடிவிட்டு போனாள். அதன் பிறகு இவன் மேல் கோபம் வந்தாலும் அதை அவன் மேல் காட்ட முடியாமல் தன் மேல் காட்டினாள். அதையும் தாண்டி விதி அவன் வசம் இவளை சேர்த்துவிட அவனை என்ன செய்யலாம் என்று யோசித்தாள் திருமணத்திற்கு முன்பு. தன்னை தொடவே கூடாதுன்னு சத்தியம் வாங்கிவிட வேண்டும். அவனை காலமெல்லாம் அப்படியே இருக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள்.

"அவன் இருந்தாலும் நீ இருப்பியா? அத்தான்னு போய் நிற்கமாட்டியா மானம் கெட்டவளே!" என்று மனசாட்சி சொல்ல அந்த ஐடியாவை கைவிட்டு அவனுக்கு குழந்தையே பெற்று கொடுக்கமாட்டேன் என்று இந்த ஐடியாவில் இறங்கினாள். கொஞ்ச நாளாவது அவனை தள்ளிவைக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு முதல் நாளே தோல்வி.

அவனை பழிவாங்க வேண்டும் என்பதை மீறிய காதல் அவன் மேல் இவளுக்கு வந்தது. உடன்பிறப்புக்கும், காதலனுக்கும் இடையே அல்லாடினாள். அவன் மேல் இருந்த காதல்,ஈர்ப்பு எல்லாம் அவளை அவனுக்கு அடிமையாக்கியது. அவனில் மயங்கி போனாள். ஆனால் அக்காவை மறக்க முடியாமல் போய் எடுத்த முடிவில் இருந்து மாறவே இல்லை அவள். அவனுக்கு குழந்தையே பெற்று கொடுக்கமாட்டேன் என்றுமட்டும்தான் நினைத்தாளே தவிர ஆத்ரேயன் சொன்னது போல அவள் மற்ற எதிலுமே நடிக்கவில்லை. அவனுடன் முழு மனதோடுதான் வாழ்ந்தாள். ஆனால் இதை அவளே ஒத்துக்கொள்ளமாட்டாள். நான் அவனை பழிவாங்க திருமணம் செய்துக்கொண்டேன் என்பாள். அதெல்லாம் இல்லை என்று அவளுக்கே புரியவில்லை. ஆனால் அதற்காக இன்னொருத்திக்கு அவனை விட்டுக்கொடுக்க அவள் தயாராக இல்லை.

மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனாOpowieści tętniące życiem. Odkryj je teraz