அவள்..

1.8K 44 32
                                    

இந்த விடியல் என்னவெல்லாம் தருமோ என தோன்றுகிறது..

"இன்னைக்காவது பணத்தை bankல கட்டிடு.. இப்ப தலையை ஆட்டிட்டு கூட்டமா இருந்துச்சு வந்துட்டேனு சொல்லாத.. போன வாரம் பைக் ரிப்பேர் பண்ண கேட்டப்ப கூட இல்லைனு சாதிச்சிட்டு இப்ப வந்து என்ன பண்றதுனு கேட்கிற.. உன்னைலாம்.." கோபமும் காதலும் கலந்து திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கோபம் ரொம்ப நேரம் நீடிக்காது என அவருக்கும் தெரியும். இந்த திட்டு நேற்றைய நாளின் பரிசு.

B.Sc Maths.. B.Ed லாம் படிச்சு முடிச்சிட்டு போனா government வேலைக்கு தான் போவேனு சொல்லிட்டு.. பத்தாயிரம் பணம் கட்டி.. எதுக்கு படிக்கிறேன்னே தெரியாம சேர, சோழ, பாண்டியரையும் அசோகர் மரம் நட்டதையும் உலகப் போரையும் கரைச்சு குடிச்சது மட்டுமில்லாம ரிசர்வ் பேங்க் கவர்னர்னலிருந்து.. கிளர்க் வரைக்கும் எல்லார் பேரையும் மனப்பாடம் பண்ணி.. வாரத்துல ஒரு எக்ஸாம்னு tnpsc, tet, bankனு எல்லா எக்ஸாமும் எழுதிட்டு இருந்தேன்.

என்னோட அதிர்ஷடம் நான் நல்லா எழுதுற எக்ஸாமுக்கு ரிசல்ட் வராது.. ரிசல்ட் வர்றதுல பாஸ் பண்ண மாட்டேன்.

இருந்தாலும் மனம் தளராமல் வேதாளத்தை தூக்கி சுமந்த விக்கிரமாதித்தன் மாதிரி நானும் எக்ஸாம் எழுதிட்டே இருந்தேன்.

திடீர்னு ஒரு நாள் ஞானோதயம் வந்து M.Sc படிக்கிறேன்னு வீட்ல சொன்னது தான்.. இதுக்கு மேல இவளை வச்சிருந்தா படிக்கிறேனு சொத்தையே அழிச்சிடுவானு கல்யாணம் பண்ணி துரத்தி விட்டுட்டாங்க. நல்லதா போச்சு.

பத்து மணிக்கு திறக்க இருக்கும் bank வாசலின் வரிசையில் நிற்க ஏழு மணிக்கே வந்துட்டேன்.

பரவாயில்லை.. நேற்றை விட கொஞ்சம் முன்பாகவே வந்துவிட்டேன். இன்று எப்படியும் பணத்தை கட்டிவிடுவேன்.

Demonetation.. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.. என்ன செய்றது.. புகுந்த வீட்டுக்கு வருவதற்கு முன் அம்மா அப்பாவுக்கு தெரியாமல் தந்தது.. அப்பா அம்மாவுக்கு தெரியாமல் தந்தது.. கணவருக்கு தெரியாமல் மறைத்து வைத்தது.. என எல்லாமே 500, 1000 ரூபாய் நோட்டுகள்..

உதிரிப்பூக்கள்Where stories live. Discover now