இதை செய்து தான் ஆகவேண்டுமா.. என பலமுறை நானே கேட்டுக் கொள்கிறேன்..
எத்தனை முறை கேட்டாலும் என் பதில் ஆம் செய்து தான் ஆகவேண்டும் என்பதாகவே இருக்கிறது..
எதற்காக இதை செய்ய விழைகிறேன் என்பதை இந்த உலகிற்கு நான் அறிவிக்க வேண்டுமா.. வேண்டாம்.. ஏன் வேண்டாம்..
என்னை இதை செய்யத் தூண்டிய.. அந்தக் கனவை பற்றி நான் சொல்லிய போது.. இந்த உலகம் என்னை பார்த்து நகைத்துக் கொண்டிருந்தது..
அதனாலென்ன.. இந்த உலகில் யாரோ ஒருவர் இருக்கலாம்.. உன் சொற்களை எள்ளி நகையாடாமல் முழுமனதோட செவிகளில் வாங்கிக் கொள்ள..
இருக்கலாம் தான்.. இருந்திருந்தால் நன்றாக இருக்கும் தான்.. அப்படி யாரும் என்னருகில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை..
சரி என்ன செய்யப்போகிறாய்..
தற்கொலை..
என்ன தற்கொலையா..!
ஆம்.. இதற்கேன் இத்தனை ஆச்சரியம்..
அவ்வளவு மன அழுத்தமெனில் நல்ல மனநல மருத்துவரை நாடலாமே..
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
செத்துப்போக தைரியம் இருக்கும் உனக்கு வாழ தைரியம் இல்லையா..
வாழ்க்கை ஒரு முறை தான்.. வாழ்ந்து பார்..
கடவுள் கொடுத்த உயிரை போக்கும் உரிமை உனக்கில்லை..
நீ செத்துப் போய்ட்டா உன் குடும்பத்தை யார் பாத்துப்பாங்க..
தற்கொலை கோழைத்தனம்..
எல்லாருக்கும் தான் பிரச்சனை இருக்கு.. அதுக்கு சாவு தான் முடிவா..
செத்துப்போறேன்னு சொல்லி மத்தவங்களை மிரட்டி காரியம் சாதிச்சுக்கிறது இப்பலாம் பேஷனாகிடுச்சு.
தற்கொலை செய்பவர்களின் புள்ளி விவரங்களை பார்த்தால்..
போதும்.. நிறுத்துங்கள்.. நீங்கள் பேசும் எதுவும் என் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை..