ரகசியங்களோடு புதைந்தவள்

39 3 0
                                    

பெங்களூரின் அதிகாலைப் பொழுது அழகாகவே விடிந்தது. ஆனால் காலைச் சூரியனைப் பார்த்து “எவ்வளவு அழகா இருக்கு பாரேன்” என்று கூறும் அவள் இல்லை.

இந்த வீடும் நானுமே அவளுக்கு உலகம். போன மாதம் அவள் வாங்கி வைத்த ரோஜாச்செடியில் முதல் பூ பூத்திருக்கிறது. இந்நேரம் அவள் இருந்திருந்தால் தெருவில் உள்ள எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ரோஜா மலர்ந்தது.

வாட்ச்மேன் சிவஞானம், பால்காரன் நாகராவ், பேப்பர் போடும் ராஜு என எல்லாரையும் அழைத்துச் சொல்வாள். “பாருங்களேன் நான் வாங்கி வைத்தச் செடியில் முதல் பூ பூத்திருச்சு” என்று அவள் கூறும் போது எல்லோருக்கும் அவள் குழந்தை என்றே எண்ணத் தோன்றும்.

எந்த உணவையும் ரொம்ப எளிதாக சமைத்து விடுவாள். சுவை நாக்கை விட்டு அகலாது. மழையில் நனைவதென்றால் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

அவளின் ரசனை எப்போதுமே அழகானது. வீடு முழுக்க பூச்செடிகள். “ஏன் இப்படி வீட்டிலே இவ்வளவு பூச்செடிகள்?” என்று கேட்டால் என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் கூட என்னைப் பார்த்து பொய்யாக சிரிக்கலாம். ஆனால் அந்தப் பூக்கள் என்னைப் பார்த்து உண்மையாக மட்டுமே சிரிக்கும் என்பாள். பல நேரங்களில் எனக்கே சந்தேகம் வந்துவிடும் அவள் எனக்கு தாயா இல்லை மகளா என்று...

அம்மா, என் அம்மா சுஜாதா, அவள் இன்று இல்லை. ஆனால் அவளோடு புதைந்து போன மர்மங்களுக்கு விடை சொல்லத்தான் ஆளில்லை. இத்தனை பெரிய பெங்களூரில் அவளுக்கு தெரிந்த இடங்கள் இரண்டு, மூன்று மட்டுமே. அவளுக்கு தெரிந்தவர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அவளைச் சுற்றித்தான் எத்தனை மர்மங்கள்! விடையறியா கேள்விகள். அவளின் பூர்வீகம் தமிழ்நாடு என்பது தெரியும். தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருக்கு எப்படி வந்தாள் என்பது தெரியாது.

ஆடி அமாவசை, புரட்டாசி சனிக்கிழமை தொடங்கி பங்குனி உத்திரம் என எல்லாவற்றிற்கும் கோவிலுக்கு போய் வரும் அவள் எப்படி இத்தனை பெரிய கிறிஸ்தவ பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள் என்பது தெரியாது.

உதிரிப்பூக்கள்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin