(அனைவர்க்கும் வணக்கம் , இது என்னுடைய முதல் கதை . இதில் எதாவது பிழை இருந்த எடுத்து சொல்லுங்க . கொஞ்சம் எழுத்து பிழை இருக்கலாம் , pls அட்ஜஸ்ட் பண்ணிகொங்க )
சட சடவென கொட்டும் மழைக்கு பயந்து அவசரமாக துணிகளை எடுத்துக்கொண்டு இருந்தாள் நம் கதாநாயகி. ஒருவழியாக எல்லா துணிகளையும் பாதி ஈரமாகவும் மீதி காய்ந்தும் அள்ளிக்கொண்டு அருகில் உள்ள டேபிள் மீது போட்டுவிட்டு வழக்கம் போல மழையை ரசிக்க தொடங்கி விட்டாள்.
அதற்குள்ளாக நம் கதைநாயகி பற்றி சிறு விளக்கத்தை காண்போம்.
நம் நாயகியின் செல்லப் பெயர் முகில், முழுப்பெயர் மகிழினி.பெயருக்கு ஏற்றாற்போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வலம்வருவாள் . பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிறாள். படிப்புக்கு ஏற்ற வேலையும் கேம்பஸ் இன்டெர்வியூவில் கிடைத்துவிட்டது. முகில் பார்ப்பதற்கு 5 '2 அடி உயரம் அளவான உடல் , வெள்ளையும் இல்லாத மஞ்சள் கலந்த தேகம். வட்டமுகம் வில்புருவங்கள் , கூர்நாசி etc.., இது எல்லாத்துக்கும் மேல எப்பொழுதும் புன்னகை சிந்தும் குழந்தை முகம். ( இவ்ளோ போதும்னு நினைக்குறேன் நாமளும் போய் முகிலோட சேர்ந்து மழையை ரசிப்போம் ).
முகில் , கோடைகாலத்துல இதமா இப்படி மழை பெய்த எவ்ளோ சுகம். ம்ம் இதுல போய் டான்ஸ் போட்ட எவ்ளோ சுகமாயிருக்கும். என்ன பண்ணுறது எல்லாம் விதி. அந்த dog மட்டும் சொல்லாம இருந்தா இப்போ நான் எவ்ளோ jolly ஆஹ் enjoy பன்னிட்டு இருந்துஇருப்பேன். இப்போ மழைல ஆட்டம் போட்டாலும் அவனுக்கு தெரியவா போகுது ," முகில் , இந்த சான்ஸ் ஆஹ் விட்ட அவ்ளோதா , எவ்ளோ ஆட்டம் போடா முடியுமோ அவ்ளோ போடலாம் " சொல்லிட்டு போய் ஆட்டம் போடா ஆரம்பிச்சுட்டா.
ஒவ்வொரு மழைத்துளியையும் ரசித்து அதில் குழந்தையாய் ஆட்டம் போட்டாள். "இவ்ளோ சுகமா இருக்கு. இதைப்போய் வேண்டாம் மழைல ஆட்டம்போடத அந்த dog சொல்லுது , அவன் சொன்ன நான் கேட்கணுமா போடா dog " னு திட்டிட்டே நல்லா ஆட்டம் போட்டாள்.
அப்படியே ஈரத்தோட வீட்டுக்குள்ள வந்து ஹேர் dryer போட்டு தலையை கயவச்சு டிரஸ் மாத்தி முன்ன எப்படி இருந்தாலோ அதே மாறி இப்பவும் உக்காந்து நல்ல பிள்ளையாக ஈரத்துணியை காயப்போட்டாள்.
அதுக்குள்ள அவங்க அப்பா சிவசேகர் ,அம்மா ரதி ,அண்ணன் மகிழரசன் (அந்த dog இவன்தான் ) பாட்டி கற்பகம் , தாத்தா ராஜசேகர் எல்லாரும் வீட்டுக்குள்ள வந்துட்டாங்க. எல்லாத்துக்கும் முகில் na ரொம்ப இஷ்டம் . அதுலேயும் மகி அவள் மீது உயிரே வைத்துஇருக்கான். ( இப்போ தெரிஞ்சுருக்குமே ஏன் முகில் இப்படி திட்டிட்டு இருந்தானு ).
மகி ," முகில் எதுக்குடா மழைல ஆட்டம்போட்ட , உனக்கு எதாவது சரியிலேன்னா இங்க யாரும் என்ன நிம்மதியா இருக்க விடமாட்டாங்கனு தெரிஞ்சுதானே ஆட்டம் போட்ட "
முகில்" நான் எப்போடா மழைல ஆட்டம் போட்டேன் ,நீயா எதாவது சொல்லிட்டு இருக்காதா ",மனசுக்குள்ள இவனுக்கு எப்படி தெரிஞ்சது யோசிச்சுட்டு இருந்த.
நான் சொல்லவில்லை டி , வீடுதான் உன்ன காட்டி கொடுத்துச்சு . எல்லாமே சரியாய் செஞ்சுட்ட ,ஆனா வீட்டை சுத்தம் செய்யலியே , பாரு நல்ல உன்னோட முட்டைக்கண்ண விரிச்சு பாரு . வாசலிருந்து பாத்ரூம் vara ஈரம். என்று மகி சொல்லிவிட்டு சிரித்தான் .
அதுக்குள்ள வீட்டுல எல்லாரும் முகிலை கேள்விமேல கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க , ஒரே பாசமழையப்போச்சு. முகில் இதுலேயும் ஒரு குளியல் போட்டுட்டு மகி ஆஹ் அடிக்க ஓடிட்டாள்.
அதுக்குள்ள அவனும் escape ஆகிட்டான்.
இப்படி எல்லா சொந்தங்களும் பேரன்பும் இருந்தும் அவள் இது எதுவுமே வேண்டாம் என எல்லாரையும் விட்டு போகப்போகிறாள்..
விதி யாரை விட்டது ,இவ்வளவு சொந்தகள் இருந்தும் அனாதை ஆகப்போகிறோம் என்று யாராவது சொல்லியிருந்த அவ உடனே அவங்களே கிண்டல் பண்ணியே கொன்னுஇருப்ப.
சிரிப்பை மற்றும் போலியான அழுகையை தவிர வலியின் கண்ணீரை அறியாத முகில் , இனி நீ வலியின் கண்ணீரை தவிர வேற ஆறுதல் இல்லேனு நினைக்க போற . விதியின் விளையாட்டு ஆரம்பிப்பது அறியாமல், இன்றைய மகிழ்ச்சியை அனுபவிக்கிறாள்.
விதியின் விளையாட்டு ஆரம்பமாகிறது அடுத்த அத்தியாயத்தில் .
*********************part-1*********************************
YOU ARE READING
துளி துளியாய் - பகுதி 1
Romanceஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........