காலை 10 மணிக்கு பொள்ளாச்சி வந்து இறங்கினர் நம் முகில் குடும்பத்தார். அவர்களை அழைத்துச்செல்ல இளமாறன் வண்டியோடு ரயில்வேஸ்டேஷன் வந்துஇருந்தான்.
வழக்கம்போல் பெரியவர்கள் நலவிசாரணை முடிந்ததும் முகில் அருகே வந்தான் .
"முகில் எப்படி இருக்க ? நல்ல படிக்கிறியா ?"
நான் நல்ல இருக்கேன் அத்தான் ..நல்ல படிக்குறேன் அத்தான் ..நீங்க எப்படி இருக்கீங்க அத்தான் ?
வீட்டுல எல்லாரும் சுகமா அத்தான் ? " அத்தானுல நல்ல அழுத்தம் குடுத்து பதிலடி குடுத்தாள் முகில்.
"முகில் என்ன ரொம்ப மரியாதை குடுக்குற ஏதோ சரி இல்லியே,அத்தை மாமா பாட்டி தாத்தா மகி, முகில்க்கு என்ன ஆச்சு, தலையில அடிப்படிருச்சா?
"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, உன்ன நான் தான் மரியாதை குடுத்து கூப்பிடச்சொன்னேன்.அதான் அவ அத்தான் சொல்லிட்டு திரியுற, நீ வாப்பா நாம போலாம் என்றார் பாட்டி.
கிழவி இரு உன்ன அப்புறம் வச்சுக்கறேன் முகில் கார் கிட்ட போய்ட்டாள்.
எல்லாரும் வீட்டுக்கு போய் நலவிசாரணை முடிந்து பிரெஷ் ஆக போய்ட்டாங்க .
இளமாறன் பற்றி ஒரு சிறு விளக்கம்
சுந்தரம்- விசாலாட்சி தம்பதியரின் ஒரே அருமைபுதல்வன் இளமாறன்.
6 அடிக்கும் கொஞ்சம் குறைவாய் மாநிறத்துக்காளை , பொள்ளாச்சியில் டிகிரி முடிச்சுட்டு வீட்டோட தொழில் ,விவசாயம் பண்ணுகிறான். ரொம்ப பொறுப்பானவன் , அமைதியானவன் .
ஆனா தானா எந்த சண்டைக்கும் போகமாட்டான் வந்த சண்டையை விடவும்மாட்டான் .
நிகிதா அவனோட அத்தை பொண்ணு. வீட்டுல முறைப்படி நடக்குற கல்யாணம்.அவனுக்கு நிகிதான்னா உயிர் .
நிகிதா ராமசாமி -அகிலா தம்பதியரின் ஒரே அருமைப்புதல்வி நிகிதா .
கோயம்பத்தூர்ல டிகிரி முடிச்சுட்டு வீட்டுல இருக்க.
இளமாறனுக்கு ஏத்த ஜோடி. அமைதியான பொண்ணு ஆனா என பண்ணுறது காதல் படுத்தும்பாடு அவ குடும்பத்துக்கு எதிரே நிக்கவைக்குது .
நிகிதாவும் முகிலும் நெருங்கிய நண்பிகள்.
ரமேஷ் ராமச்சந்திரன்- அரசி தம்பதியரின் 10 வருட தவத்திற்கு கிடைத்த சீமைந்தபுத்திரன். கோயம்பத்தூரில் நிகிதா படித்த கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தான் . படிப்பை தவிர அனைத்து வேலைகளையும் செய்வான். லவ் அட் பர்ஸ்ட் சைட் மாறி நிகிதாவ லவ் பண்ணுறான்.
BẠN ĐANG ĐỌC
துளி துளியாய் - பகுதி 1
Lãng mạnஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........