அத்தியாயம் - 12

659 50 16
                                    

தனது அன்பிற்குரியவளின் கவலையை தீர்க்க அவன் பெங்களூரு நோக்கி வேகமெடுத்தான்.

தனது கவலையனைத்தும் வடிந்தாற் போல் நிகிதா முகிலுக்கு காலை உணவை அளித்துவிட்டு சாய்ந்து படுத்தாள். இவரை இனிக்குத்தான் எனக்கு தெரியும். ஆனா எல்லாத்தையும் இவர்கிட்ட சொல்லிட்டேன் இது சரியா தப்பா எதுவும் புரியல. ஒன்னு மட்டும் நிச்சயம் முகிலுக்கு இவர்தான் ஏற்றவர். முகிலை உயிரா பாத்துபாருனு தோணுது. முகில் முன்ன மாறி குணமாகி சந்தோசமா இருந்த போதும். இளா கிட்ட உண்மையையெல்லாம் சொல்லணும் .இதுக்குமேல மறைக்கக்கூடாது அவன் என்ன முடிவுஎடுத்தாலும் ஏத்துக்கணும்.கடவுளே நீதான் எல்லாத்தையும் காப்பாத்தணும்ப்பா. என்று எல்லா பொறுப்பையும் கடவுள் மீது திணித்துவிட்டு கண்ணயர்ந்தாள்.

முகிலோ இதையெதும் அறியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். வண்டியை ஓடுகிறவனோ நேராக செல்லும் சாலையை கவனிப்பதைவிட முகிலை கவனித்துக்கொண்டு காரை ஓட்டினான்.

உன்னோட இனியன கொண்டு உன்முன்னாடி நிக்க வைக்கணும்னுதான் ஒரு நல்ல மனுசனா தோணுது. என்ன பண்றது உன்ன லவ் பண்ணிட்டேன். உன்ன யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியல. ஒருவேளை இனியன் உயிரோட இருந்தான்னு வைச்சுக்கோ அப்பகூட உன்ன அவன்கிட்ட குடுக்கணும்னு நான் கனவுல கூட முடிவு எடுக்கமாட்டேன். கடவுள் எனக்கே எனக்குன்னு உன்ன படைச்சுஇருக்காரு. உன்ன எப்பவும் என்னோட வச்சுக்கணும்னு நினைக்குறேன் அதுக்கு முதற்படிதான் இப்போ நான் பண்ணப்போறேன். என்று தன நினைவுகள் மூலம் அவளுடன் பேசினான்.

கார் பெங்களூரு விமான நிலையத்தை அடைந்தது. அங்கே பிரணவ் அவர்களுக்காக காத்துஇருந்தான்.

" எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா "

"எல்லாமே பக்கவா ரெடி பண்ணிட்டேன். அங்க எல்லாரும் நமக்காக காத்துகிட்டு இருக்காங்க."

"அப்பா எங்க இருக்காருன்னு ரவிகிட்ட விசாரிச்சியா ?"

"உன்னோட அதிர்ஷ்டம் , அவர் சென்னைல தான் இருக்கார். நான் அவர்கிட்ட டுடே நீ வரேன்னு சொல்லிட்டேன் .அவரை அங்கேயே இருக்கசொல்லிட்டேன் "

துளி துளியாய் - பகுதி 1Where stories live. Discover now