கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் கணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோநிகிதா கூறியதை கேட்டு அவன் மனமோ முகிலிடம் புலம்பிக்கொண்டு இருந்தது.நிகிதா அவனை நோக்கினாள். அவனோ நிகிதா சொல்வதை கேளாமல் தன்னுலகில் இருந்தான்.
"என்னாச்சு சார் " என்று அவள் இருமுறை அழைத்ததும் திடுக்கிடலோடு அவளை பார்த்தான்.
அவனது கண்களில் கண்ணீர்துளியினை கண்ட அவள் பதறினாள். அவனது நிலைமையை உணர்ந்து அவளது குற்றவுணர்ச்சி அதிகமாகியது.
அவள் தலையை குனிந்துகொண்டு உட்கார்ந்து விட்டாள்.சிறிது நேரத்தில் நிதானமடைந்த நீலேஷ் நிகிதாவை பார்த்தான். அவள் காதலுக்கு முகிலை உபயோகப்படுத்த நினைத்தாள். ஆனால் முகிலோ வேறு ஒருவனை காதலித்தாள் என்று தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தான். காரை ஒருமுறை நோக்கி அதில் முகில் இருப்பதை பார்த்து நிகிதாவிடம் அருகிலுருந்த தண்ணீரை அவளிடத்து கொடுத்துவிட்டு, " மேல என்ன ஆச்சுன்னு சொல்லுங்க " என்று மீதியை அறிய முற்பட்டான்.
தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு சற்று ஆசுவாசமடைந்தாள்."சொல்றேன் சார் "
"இந்த சார் வேண்டாம் நீங்க என்ன நீலேஷ் கூப்பிடுங்க. இல்லேன்னா நீங்க முகிலுக்கு
என்ன ஆவீங்க "
" அவளும் நானும் சிஸ்டர் முறை வரும் "
"அப்போ என்ன நீங்க நீலேஷ் அத்தான் சொல்லுங்க ஆர் நீங்க நீலேஷ் கூப்பிட்டா கூட , எனக்கு பிரச்சனை இல்ல "
"சரிங்க நீலேஷ் " என்று மீதியை கூறத்தொடங்கினாள்.
"எங்க மேரேஜ் முடிஞ்சதும் ,நாங்க எல்லாரும் சென்னை வந்துட்டோம் . வந்து வீடு எல்லாம் சரிபார்த்து மகியுடைய நண்பர்கள் மூலம் பால் காய்ச்சுவதற்கு ஏற்பாடு பண்ணினோம்.
அப்போது வரை முகில் கிட்ட மாற்றம் தெரிஞ்சது. இளா அவளிடம் தனித்து பேசினான். அவளோ
விட்டதை வெறித்து பார்த்துகொண்டுஇருந்தாள். நாங்கள் கூறுவது எதையும் அவள் அறிந்துகொள்ள முயற்சிக்கவில்லை .டாக்டரிடம் காண்பித்தபோது அவர் ஒரு சைக்காட்ரிஸ்ட்டை பார்க்கச்சொன்னார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது இனியனை பற்றி . அவள் ஒருவருஷமா காதலிக்கிறாள். கோவிலில் ஒருவன் அவள் கழுத்தில் ஒரு செயினை அணிவித்து சென்றான். அவளோ அவன்தான் இனியன் என்று நம்புகிறாள்,இதை கூறி அவன்தான் தனது ஹஸ்பண்ட் என்று எண்ணி வாழ்ந்து வருகிறாள். அந்த இனியன் இறந்துவிட்டான் என்று செய்திகேட்டு இப்படி ஆகிவிட்டாள் . அவள் ஒருமாதமாக ஹாஸ்பிடலில் இருக்கிறாள். முன்னை விட அவள் இப்பொழுது அதிகம் அவனை எண்ணி தன்னிலை மறந்து வருந்துகிறாள்." என்று நிறுத்துனாள்.
YOU ARE READING
துளி துளியாய் - பகுதி 1
Romanceஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........