இன்று..
காலையில் வழக்கம் போல் கிளம்பி அலுவலகம் சென்றான் நீலேஷ். அவனது எல்லா வேலைகளையும் அவர்களிடத்து ஒப்படைத்துவிட்டு வசந்த் அலுவலகம் நோக்கி சென்றான்.
என்ன வேலை பார்க்க போறான்னு நமக்கு தான் தெரியுமே ..
இன்னிக்கு ரொம்ப ஸ்பெஷல் டே.. அவ இதை ஞாபகம் வச்சுஇருப்பாளா.மறந்துஇருப்பாளா ..
அவனோட மனசுல ரெண்டு சைடும் சண்டை போடுறாங்க.
நல்ல மனசு : கண்டிப்பா ஞாபகம் வச்சுஇருப்பா. அவ அந்த நாள்ல மறக்கமுடியாது
கெட்டமனசு : ஹுஹும் எனக்கு நம்பிக்கையே இல்ல. அவ உன்ன ஞாபகம் வச்சுஇருக்காளான்னு கூட தெரியாது . அதுல இன்னிக்கு நடந்த விஷயத்தை ஞாபகம் வச்சுஇருக்கணுமாக்கும். நல்ல இருக்கு போ..
நல்ல மனசு : டேய் நீ சும்மா இருடா. இந்த இவன் சொல்ற பேச்சை எல்லாம் கேக்காத. நான் சொல்லுறத கேளு. அவ உன்னையும் மறக்கல , இந்த நாளையும் மறக்கல.
கெட்டமனசு : என்ன எதுக்குடா சும்மா இருக்க சொல்லுற. இங்கப்பாரு , அவ உன்ன கொஞ்சமாவது நெனச்சு பார்த்துஇருந்த நிகிதா,இளா ,மகி யாருகிட்டாவது விசாரிச்சுஇருப்பா. அவ அப்புடி எதுமே இவ்ளோ வருசமா கேக்கல. இனியும் அவ வருவானு நீ நம்புறியா ?
இப்படி இரண்டும் போட்டுப்போட்டு அவனை குழப்ப , அவன் மனமோ அன்றைய நிகழ்ச்சிக்கு சென்றது.
அந்த நாள் .............
தனது காதலை பகிர்ந்துகொள்ள இருவரும் ஒரே இடத்தில் குழுமினர். யாரு முதலில் சொல்வது என்று புரியாமல் யிருக்க , அவனோ தனது பையிலிருந்து ஒரு கவரை அவளுக்கு வழங்கினான்.
அதே சமயம் அவளும் வழங்கினாள். இருவரும் சிரித்துக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இருவரும் அவர்களது பரிசை திறந்து பார்க்கவில்லை.
நேரமாவது தெரிந்து , நீலேஷ் அவளிடம் , " அதை பிரிச்சுப்பாரு "
"நீங்களும் பாருங்க ,"
"நீ முதல பாரு "
"நீங்க பாருங்க முதல்ல "
ŞİMDİ OKUDUĞUN
துளி துளியாய் - பகுதி 1
Romantizmஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........