எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே... ஆஆஆ...
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே
உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது.. ஆ..
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
அது காலத்தை கட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது .............
எனக்கானவள் இப்படி இருக்கிறாளே என்று தன்னுடைய இயலாமையை காரில் காமித்து கொண்டு இருந்தான்.
வேகமாக சீறி போய்க்கொண்டு இருந்த கார் ஒரு உணவகத்தின் முன் நின்றது. அதிலிருந்து நிகிதா ,முகில் மற்றும் அந்த நெடிய உருவம் இருவரும் இறங்கினார்கள்.
" சார் நீங்க யாருனு சொல்லவில்லையே "
"என்னோட நேம் நீலேஷ் யாதவ் , யாதவ் குரூப் ஆப் கம்பெனியின் எம் .டி மிஸ்டர் ராஜேஷ் யாதவின் ஒரே புதல்வன். இப்போ நீங்க சொல்லுறீங்களா நிகிதா , முகிலுக்கு என்ன ஆச்சுன்னு "
ESTÁS LEYENDO
துளி துளியாய் - பகுதி 1
Romanceஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........