இரவு வானை ரசிக்க இலகிய மனதுடன் காத்திருந்தேன்!
வானில் விரிந்த நட்சத்திரங்களை போல்
என் மனமெங்கும் உன் நினைவுகளை விரித்து நின்றாய்!
கருநிற வானில்
பிறையில்ல நாளிலும்
என் நெஞ்சிலோ பௌர்ணமி கோலம் !
குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாள் முகில். அவளுக்கு இருந்த உறவெல்லாம் எப்போதோ அவள் மனதிலிருந்து மடிந்து போயிருக்க , நம்ம தாராணியும் இளா -நிகிதா , மகி மட்டுமே அவள் உலகம் என்று இருந்தாள்.இந்த ஐந்து வருடத்தில் அவளுடைய வாழ்க்கை வெறுமையை சந்தித்துஇருந்தாள்.
அவளின் ஒரே சந்தோசம் தாராணிதான்.ஐந்து வருடங்களுக்கு முன் முகிலின் வாழ்வில் நடந்ததை பார்ப்போம் .
அனைவரும் இளா -நிகிதா திருமணம் முடிந்தவுடன் சென்னை வந்து அடைந்தனர். வரும் வழியிலேயே மகி தன் நண்பர்களிடம் கூறி இளா -நிகிதா தங்க ஏற்பாடு செய்தான். எல்லாரும் அந்த வீட்டிற்கு சென்றனர். அவனுடைய நண்பர்கள் வருபவர்களின் நிலை அறிந்து தங்களால் இயன்ற வரை வீட்டிற்கு தேவையான பொருட்களை சேர்த்தனர்.அனைவரும் புதிய வீட்டிற்கு வந்தனர். புதிய வீட்டின் ஏற்பாடை பார்த்ததும் இளா மகிக்கும் அவனது நண்பர்களுக்கும் நன்றி கூறினான்.
அனைவரும் குளித்து நல்ல நேரத்தில் பால் காய்ச்சி அவர்களுடைய வாழ்க்கையை அந்த வீட்டில் தொடங்கினர்.இவர்கள் வந்ததும் பாட்டியும் தாத்தாவும் இவர்களுடனே இருந்தனர்..
இதையெல்லாம் கவனித்தவர்கள் முகிலை கவனிக்க மறந்து விட்டனர்.
இனியன் இறந்த செய்தியறிந்த முகில், அதை நம்பாமல் அவளுடைய மனது அவளை வதைத்துக்கொண்டு இருந்தது. இதை அவள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இதுவே அவளுக்கு பின்னாளில் வரப்போகும் ஆபத்திற்கு அடித்தளம் என்பதை அவளோ அவளுடனிருப்போர்களோ உணரவில்லை.
VOUS LISEZ
துளி துளியாய் - பகுதி 1
Roman d'amourஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........