( தாமதித்தற்கு மன்னிக்கவும்.. இனி தினமும் என்னுடைய இந்த கதையை எழுதப்போகிறேன் உங்களுடைய ஆதரவை நம்பி..........)
நிச்சயத்திற்கு தேவையான அனைத்தையும் மாப்பிளை பார்த்துப்பார்த்து செய்வதால் உண்டான மகிழ்ச்சியுடன் பெரியவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டு தூங்க சென்றனர். இளா நிகிதாவை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்க அவனுக்கு தோல்வியே கிட்டியது. ஒரு பார்சல் நிகிதா ரூமில் இருக்க அதை பார்த்தவளுக்கு ஆனந்தம். அவள் கேட்ட புடவை அதிலிருந்தது. அதனுடன் ஒரு கடிதமும் இருக்க ஆவலுடன் அதை படித்துவிட்டு இளாவிடம் சென்று மன்னிப்பு கேட்டாள். இளாவிற்கு ஒன்றும் புரியவில்லை. நிகிதா அவனிடம் நேற்று நடந்ததை கூற துரோகி என திட்டிக்கொண்டே அவளிடம் மீதி கதையை கேட்க அவளும் கூறினாள். அந்த பார்சல் மற்றும் கடிதம் இரண்டுமே நீலேஷ் அண்ட் முகிலுடைய வேலை என்று.ஒருவழியாக இவர்களும் சமாதானம் ஆகிவிட்டார்கள்.
நீலேஷ் அண்ட் முகில் இருவரும் விடிய விடிய கதையடிக்க , இளாவும் நிகிதாவும் தூங்கமுடியாமல் தவித்துக்கொண்டு இருந்தனர்( நீலேஷ் ,முகில் ரெண்டு பேரும் இவர்களுடைய மொபைல் வாங்கி மொக்கை போட்டுகொண்டுஇருந்தார்கள் ). முகில் தனது கனவை அவனிடம் முழுதாக கூறாமல் , என்னை பற்றி எப்படி தெரியும் என்று அவனை குறுக்கு விசாரணை செய்யத்தொடங்கினாள். ' ஒருநாள் நல்ல மழை , அப்போ நீ டான்ஸ் ஆடிட்டு இருந்த , அந்த நொடி அந்த சிரிப்பு அந்த முகம் என்னையும் டான்ஸ் ஆட கூப்பிட அந்த நிமிஷமே நான் உன்மேல பைத்தியமாகிக்கிட்டேன். வாழ்ந்த உன்னோடதான்னு முடிவுபன்னிட்டேன். தினமும் உன்ன பாக்குறதுதான் எனக்கு முதல் வேலையே என்று அவளை பற்றி கூற , முகிலோ அவனது காதலில் மெய்மறந்து இருந்தாள். ஒருவேளை அவன் பர்ஸ்ட் எங்க என்ன இடத்துல பார்த்துஇருந்தான் சொல்லியிருந்த , பின்னாடி வர சிக்கலில் இருந்து ஈஸியா தப்பிச்சுஇருக்கலாம். என்ன பண்றது அந்த சிக்கலையும் அனுபவிக்கணும்னு அவளுக்கு எழுதியிருக்கு.
CZYTASZ
துளி துளியாய் - பகுதி 1
Romansஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........