அத்தியாயம் -5

849 56 11
                                    

தலைக்கனக்க மெல்ல கண்திறந்து பார்த்தான் இளா. அவர்களிருந்த நிலை அவனை கவலை கொள்ள செய்தது. தன்னுடைய சர்ட்டை கழட்டி முகிலுக்கு போர்த்திவிட்டான்.அருகில் தண்ணீர் எடுத்து அவன் முகம் கழுவிட்டு அவகிட்ட சென்றான். முகிலை மயக்கம் தெளிய வைத்து இருந்த நிலையை சொல்லி சமாதானப்படுத்தினான்.

அவளோ இனியனின் நினைவில் புலம்பினாள். இளாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இனியனை அடையாளம் கூட தெரியவில்லை. ஆனால் அந்த இனியன் கூறியது மட்டுமே நினைவில் இருந்தது.

"இளா என்னோட மூஞ்சுறுவ நல்ல பாத்துக்கோ நான் திரும்பி வரும்வரை. இப்போ என்னோட பொண்டாட்டி அவ . பாத்துக்கோ "

பொண்டாட்டி யாருக்கு யாரு பொண்டாட்டி அவன் குழம்பிப்போய் அவளை பார்த்தான்.

அவள் செயினோடு கரைந்துகொண்டு இருந்தாள்.

அந்த செயின் தாலிக்கொடி போல் இருந்தது.அதில் ஐ அண்ட் எம் நடுவில் கோர்த்து இருந்தது

அவனைஅறியாமலே இனியன் அண்ட் முகில் என்று கூறினான்.

அவர்களிருவரும் நடந்ததை பகிர்ந்துகொண்டு வீடு வந்து சேர்ந்தனர். ஒருவரும் அறியாமல் அனைத்தையும் மறைத்தனர்.

அனைவரிடமும் சிறுவிபத்து என்று கூறி சமாளித்தனர். அதற்குப்பிறகு இருவரிடமும் மிகப்பெரிய மாற்றம் இருந்தது. இருவரும் கடனே என்று 8 நாட்களும் வாழ்ந்தனர்.

இன்று இளாவுடைய திருமணநாள்.

காலை முகூர்த்தத்துக்கு தேவையானவற்றை எடுத்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர்.

முகிலோ இனியன் கெடைக்கணும்னு தன்னை உருகி தவமிருந்தாள்.

இது முகிலா என ஆச்சர்யப்படும் அளவுக்கு அமைதியாக இருந்தாள்.

அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர் மூவரைத்தவிர. இளா,முகில், மகி.

மகி , ஏதோ பிரச்சனைன்னு யூகித்தான். இளாவிடத்தும், முகிலிடத்தும் ஒரு பதிலும் இல்லை.

துளி துளியாய் - பகுதி 1Where stories live. Discover now