அத்தியாயம் -18

706 48 40
                                    

அனைவரும் புறப்பட்டு துணி எடுக்க புறப்பட்டு கொண்டுஇருந்தார்கள். காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பினார்கள். அங்கே துணிக்கடையை சென்றடைந்ததும் , முதலில் நிச்சயத்திற்கு தேவையான புடவை எடுப்போம் என்று கூற , நீலேஷ் லெஹாங்க தான் எடுக்கணும்னு என்று கூற, இரண்டையும் எடுப்பதென்று முடிவு எடுத்தனர்.
முதலில் புடவை எடுக்க ஒரு தளத்தில் நுழைந்தனர்.

நீலேஷ் , முகிலை பார்த்துக்கொண்டு இருக்க , அவளோ எதை எடுப்பது என்று குழம்பிக்கொண்டே இருந்தாள். ஒவ்வொரு சேலையாக அவள் மீது வைக்க அவனோ எதும் பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டே இருந்தான். அவள் எடுத்த அத்தனை சேலையும் எதாவது காரணம் சொல்லி வேண்டாம் என்று கூறிக்கொண்டு இருந்தான். வீட்டினர் அனைவரும் சோர்ந்து போயினர். காலை 10மணிக்கு ஆரம்பித்த வேலை இன்னும் முடியவில்லை ( ஏன்னா மணி 2 ஆச்சு , பாவம் பசிக்கும்ல ) . பெரியவர்கள் அவர்களை விட்டுவிட்டு தங்களுக்கு துணி எடுக்க களைந்து சென்றனர். அந்த சாரி எடுத்துபோடுபவனும் அவளுக்கு சாரி காட்டி காண்பிப்பவரும் மனதில் திட்டிக்கொண்டே வேலையை செய்தனர்.முகில் மட்டும் என்ன சும்மாவா அவளும் செமையா திட்டிட்டே இருந்த .

நீலேஷ் : "முகில் ஜூஸ் குடிச்சுட்டு நாம மறுபடியும் பாக்கலாம் "

முகில் : " ஹப்பாடா .. குடுங்க " இப்போவது தோணுச்சே என்று அவனிடம் செல்ல , அவனோ அங்கு வேலை பார்ப்பவர்களை அனுப்பிவிட்டு நான் சாரி காமிக்குறேன் வா பாக்கலாம்னு அடுத்தடுத்து எடுத்து போட்டான்.

முகில் (மைண்ட் வாய்ஸ்) : " டேய் நானே பசிக்குதுனு இருக்கேன் , இவன் வேற ..இங்க இருக்கவங்கள ஜூஸ் குடிக்க சொன்னியே ,எனக்கு வேணுமான்னு கேட்டியா , ***************" என்று முணுமுணுத்துக்கொண்டே இருந்தாள்.

முகில் : "நீலேஷ் , நீங்க ஜூஸ் குடிக்கலயா , வாங்க நாம ரெண்டுபேரும் போய் குடிச்சுட்டு வருவோம்" என்று அழைக்க அவனோ ," இல்லமா , நான் இப்போதுதான் குடிச்சேன். அவங்களே வந்துகுடுத்துட்டு போனாங்க. எனக்கு வேற செம பசியா அதான் குடுச்சுட்டேன் "

துளி துளியாய் - பகுதி 1Donde viven las historias. Descúbrelo ahora