அத்தியாயம் - 21

3.3K 58 29
                                    

உன் கண்களில் இருந்து அகன்று விடுவேனோ என்று இமைக்காமல் என்னை நோக்கினாய்......,நாணம் வந்து என்னை ஆட்கொள்ள,மெதுவாக தலை நிமிர கன்னங்கள் சிவப்புற விழியுயர்த்தி உன்னை காண 

அந்த கண்களில் கரைகின்றேன் நானடா......

தவம் செய்யாமல் கிடைத்த வரம் நீயடா.......


சின்ன சின்ன தூறல்கள் போல என்மீது சந்தோசத்தை வாரி அளித்தாய்.....    

  என்னுள் உயிராய் கலந்தவனே

என் மூச்சாய் இருப்பவனே

 

கலைந்து போகும் கனவுகளில் நிரந்தரமாய் இருப்பதும் நீயே

கரைந்து போகும் கண்ணீரிலும் உறைந்துஇருப்பதும் நீயே

❤️️💗💓💕💖💞💝❣️💓💗💖💞 neelesh and Mukil❤️️💗💓💕💖💞💝❣️💓💗💖💞

சின்ன சின்ன சீண்டல்கள் , கொஞ்சல்கள் , நெருக்கங்களுடன் விரைவாக நாட்கள் நகர்ந்தது.


  திருமணத்திற்கு முதல் நாள் இரவு , நீலேஷ் , முகில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நீலேஷ் : இந்த நேரம் நான் ஜாலியா பேச்சுலர் பார்ட்டி எஞ்சாய் பண்ணிக்கிட்டு இருந்துஇருப்பேன்..

முகில் : ம்ம்ம் .. இங்கேயே என்ஜோய் பண்ணலாம் வாங்க என்று அழைத்து சென்று இருவரும் டான்ஸ் ஆடத்தொடங்கினார்கள்.

இருவரும் மிக நெருக்கமாக இணைந்து ஆட , நீலேஷ் அவளது இடையை அழுத்தி அவள் அருகில் வர , அவள் பதற்றமடைய அவளை விடுத்து , 'நாளைக்கு பார்த்துக்கொள்கிறேன்.. இன்னும் என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லியா என்று அவளை பார்த்துக்கேட்க

அவள் , உன்மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. என்று அவளாகவே அவனிடம் அவளைத்தர அதை ஏற்று கொள்கிறான்.

இருவரது மனமும் உடலும் ஒன்றாக இணைய அவர்களது வாழ்விலும் சந்தோசம் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர்.. பின்னால் இதே நம்பிக்கை அழியப்போகும் என்று தெரியாமல் சந்தோசமாக வாழ்ந்து கொண்டுஇருந்தனர்.    

திருமண நிகழ்விற்காக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க , அந்த நாளும் வந்தது .......

தன்னவளின் கழுத்தில் மாங்கல்யம் சூட ஆவலோடு மணமேடையில் காத்துஇருந்தான் நீலேஷ்.
முகில் மெதுவாக நிகிதா அழைத்துவர நடந்து வந்துகொண்டுஇருந்தாள். மெரூன் கலரில் மிக அழகான புடவை அணிந்து முத்துக்கள் கொண்ட நகை அணிந்து அளவான ஒப்பனையுடன் தேவதை போல் மின்னினாள். நீலேஷ் , அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

இளா அவனிடம் கைத்துண்டை குடுத்து "தொடச்சுக்கோ வழியுது" என்று அவனை சீண்ட , அவன் வெட்கமுற்று இளா மீது சாய்ந்து கொள்ள, " கருமம் இவன் பன்னுறதெல்லாம் வெட்கம்னு சொல்லவேண்டியிருக்கு " . என்று கத்தி சொல்ல அங்கே இருந்த எல்லாரும் சிரித்துக்கொண்டு இருந்தனர்..


மேளம் கொட்ட , தாலியை வாங்கி முகிலின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டுவிட்டு அவளை தன்னவளாக்கி கொண்டான்.. அவள் அழுதுகொண்டே அவனை கட்டிபிடித்துக்கொண்டாள்.

அக்னியை வலம் வர அவளை தூக்கிக்கொண்டு சுற்றி வந்தான் ..அனைவரும் மகிழ்ச்சியாக திருமணத்தை நடத்தி வைத்தனர்.. எல்லா உறவுகளும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள்..


  வரவேற்பும் முடிந்து அன்றைய இரவிற்காக அவர்களை தயார் செய்து இருவரும் காத்துஇருந்தனர்..

முகில் , நீலேஷை அடித்து 'என்ன ஏமாத்திட்டே, என்ன நம்ப வச்சு ஏமாத்திட்டே ' என்று அவனை ஹிஸ்டிரிய வந்தது போல் கத்த, அவன் சமாதானப்படுத்த முடியாமல் திணறகொண்டியிருந்தான். அதற்குள் சத்தம் கேட்டு எல்லாரும் வர அவள் எல்லாரையும் அடிப்பது போல் கத்திகொண்டே மயக்கம் போட்டு விழுகிறாள்...

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Sep 05, 2018 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

துளி துளியாய் - பகுதி 1Donde viven las historias. Descúbrelo ahora