அத்தியாயம் - 9

694 53 14
                                    


இளா வீட்டில் ..

இளாவிற்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது.


இரவு உணவு முடிந்ததும் இளா , நிகிதா இருவரும் தங்களது அறையில் யோசனையில் இருந்தனர்.
நிகிதா கிட்ட இன்னிக்காவது பேசிடனும் என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு அவளை பார்த்தான்.நிகிதாவோ ரமேஷின் திட்டத்தை நினைத்து சரி வருமா என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

அந்த இரவு வெளிச்சத்தில் , புத்தம் புது மலர் போல் முகத்தில் யோசனை படர்ந்து வேதனையோடு காணப்பட்டாள் .அதை கண்டதும் அவன் மனம் வேதனையுற்றது . எதற்காக இவளுக்கு இந்த வேதனை , பெற்றவர்களை இழந்து தனிமரமாய் என்மீது அதிகமாய் நம்பிக்கை வைத்துஎன்னோட வேதனையை தன்னோடதா இருக்கணும்னு நினைக்குறா , இனி எதற்கும் இவளை கலங்க விடக்கூடாது . இவள் என்னவள் , என்று நினைத்து அவளிடத்து வினவுகிறான்.

"நிக்கி என்ன யோசனை " என்று அவன் இருமுறை அழைத்தும் பதில் வரவில்லை. அவளை தட்டி எழுப்பவும் , திடுக்கிட்டு " என்னாச்சு மாமா " என்றாள்.

"என்ன யோசிச்சுட்டு இருக்க "

" ஒண்ணுமில்ல மாமா "

"பரவாயில்ல சொல்லு டா , என்கிட்ட சொல்லுறப்போ உனக்கு கொஞ்ச வேதனை கம்மியா இருக்கும் "

"நம்ம முகிலை பதிவு யோசிச்சுட்டு இருந்தேன் "


" ஆமா , முகில் சரியாகுறவரைக்கும் நாம இப்படியே இருக்கலாம் உனக்கு இதில எதாவது வருத்தமா " என்று அவளை பார்க்க முடியாமல் தயங்கியபடியே கேட்டான்.


" நானே இத சொல்லணும்னு நெனச்சேன் மாமா ,நீங்க சொல்லிடீங்க " என்று ' மன்னிச்சுடுங்க மாமா , என்னோட குற்ற உணர்வோட உங்களோட சேர்ந்து வாழணும்னு நெனைக்க முடியல எல்லாத்துக்கும் காரணம் நான்தானே ' என்று மனதிற்குள்ளேயே அழுதாள்.


" எதையும் நெனைச்சு வருத்தப்படாதே , என்னோட எல்லாமே இனி நீதான். இனி நீ வருத்தப்பட்டு நான் பார்க்க கூடாது " என்று அவளை அணைத்துக்கொண்டான் .

துளி துளியாய் - பகுதி 1Donde viven las historias. Descúbrelo ahora