மாமனே உன்னை காண்காம
வட்டியில் சோறும் உண்காம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலோ
கதவு தான் சத்தம் போட்டாலோ
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே..........இந்த பாட்டை காரில் போட்டுவிட்டு இளாவை பார்த்தபடியே அமர்த்துஇருந்தாள் முகில். மனதில், ஒருவழியா இவனை இங்க வர இழுத்துட்டு வந்தாச்சு என்ன பாடுபடவேண்டியதா போச்சுனு நினைத்து பார்க்கிறாள்.
நேற்றிரவு முகில், இளாகிட்ட போய் " அத்தான் நான் சொன்னதை யோசிச்சுபாத்தீங்களா , எவ்ளோவோ முயற்சி பண்ணுனேனு உன்ன சாரி உங்கள மறக்கணும்னு , என்னால முடியல " யாரோ வரும் அரவம் கேட்டு பேச்சை மாத்துறதுக்காக " அத்தான் என்ன நாளைக்கு நம்ம மலைக்கோயிலுக்கு கூட்டிட்டு போறீங்களா ? உங்க கல்யாணம் நல்லபடியா நடக்குறதுக்காக எலுமிச்சமாலை வச்சுஇருக்கேன். நீங்க தான் சாமிக்கு போடணும் "
இளாவோ என்ன சொல்லுறான்னு குழம்பிப்போய் பார்த்துட்டுஇருக்கான்.
அங்க வந்த விசாலாட்சி ," டேய் இளா ,அவள கூட்டிட்டு போய்ட்டு வா , காலைல வெள்ளணமா போய்ட்டு வந்துடுங்க "
"அத்தான் காலைல 6 மணிக்கு நான் ரெடியா கார்கிட்ட இருப்பேன் வந்துடுங்க."
காரில் இளாவோ இவளுக்கு எப்படி புரிய வைக்குறதுன்னு யோசிச்சுட்டே வண்டியோட்டிட்டு கோவிலுக்கு போறான்.முகில் கார் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே தூங்கிவிடுகிறாள்.
அந்த நெடிய உருவம் இவர்களை தொடர்ந்து பின்வருகிறது தனது இதயத்தை திருடியவளிடம் புலம்பிக்கொண்டே வருகிறது.
ESTÁS LEYENDO
துளி துளியாய் - பகுதி 1
Romanceஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........