அத்தியாயம் - 13

633 43 11
                                    

தன்னை இனியன் என்று முகிலின் உறவுகளிடம் அறிமுகப்படுத்திக்கொண்டான். அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

" நீங்க நெனைக்குற இனியன் நான் இல்லை. என்னோட அம்மா என்னை இனியன் என்று அழைப்பார்கள். " என்று அவர்களை அதிர்ச்சியில் இருந்து தெளிய வைத்தான். மகி சற்று தெளிந்து அவனை கேள்வியுடன் நோக்கினான்.

" முகிலுக்கு என்ன ஆச்சு , நான் யாரு இதெல்லாம் நீங்க கேக்கணும் நினைக்குறீங்க , அதுக்கெல்லாம் நானே பதில் சொல்றேன். முகிலும் நிகிதாவும் கோவிலுக்கு போறப்போ யாரோ இவங்கள கடத்திட்டு போய்ட்டாங்க. அங்க இருந்து தப்பிக்கறப்போ என்னோட கண்ணுல பட்டாங்க. நான் இவங்கள இங்க பத்திரமா கூட்டிட்டு வந்து சேர்த்துட்டேன். இதுல இன்னொரு விஷயம் என்னன்னா அவங்கள கடத்துனவன் முகிலை பழிவாங்க நெனைச்சு அவனுக்கு மரணத்தை தழுவிட்டான்." என்று கூறி நிகிதாவை பார்த்தான்.

"ஆமா நிகிதா நாம வரப்போ நடந்த ஆக்சிடெண்ட்ல அவன் இறந்துட்டான்." என்று நிகிதாவை பார்த்தான்.


அவனது பார்வையின் பார்த்தால் புரிந்தவள் போல் , " ஆமா மாமா,இவர் தான் எங்களை காப்பாத்தினார் ." என்று இளாவிடம் எடுத்துரைத்தாள்.

அவனோ தன்னவளுக்கு ஏதும் நேரவில்லை என்பதை தன் கண்களால் ஆராய்ந்து கொண்டு இருந்தான்.

"அவங்களுக்கு ஏதும் ஆகவில்லை இளா . டோன்ட் வொரி." என்று மற்றவர்களை நோக்கினான்.

அவர்கள் கவலையுடன் இருப்பது அறிந்து " முகிலுக்கு ஒன்னும் இல்லை , இன்னும் கொஞ்ச நாள்ல அவ பழைய முகிலா மாறிடுவா." என்று கூறி அவர்களை தேற்றினான்.

அவர்களை அங்கே இருக்க வைத்து விட்டு , தனது நண்பனை செல்லில் அழைத்தான் .

"போன காரியம் என்னவாயிற்று "

"....."

"நல்லது . அந்த மெடிசின் பெயரை டாக்டர் செல்லுக்கு மெசஜ் பண்ணிவிட்டு அப்பாவை அழைத்துக்கொண்டு இங்க வா " என்று உத்தரவிட்டான்.

துளி துளியாய் - பகுதி 1Où les histoires vivent. Découvrez maintenant