அத்தியாயம் -8

628 51 8
                                    

நினைத்து நினைத்து பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்

முகிலை அந்த மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

ரமேஷின் நண்பன் உதவியுடன் , முகிலுக்கு தவறான சில மருந்துகளை nurse மூலம் குடுத்தான்.

இதை அறியாத முகில், இனியனது நினைவிலேயே இருந்தாள் .நாளுக்குநாள் அவளுக்கு மன ரிதியாக நிறைய குழப்பங்கள் வர ஆரம்பித்தது.அவள் அதிற்குள்ளேயே உழன்று வெளிவரத்தெரியாமல் இருந்தாள்.

டாக்டர்களும் இவளை பரிசோதித்து விட்டு மேலும் சில மருத்துவ முறைகளை கையாண்டனர்.

அனைத்திலும் அவள் இன்னும் தெளிவடையவில்லை , முற்றிலுமாக இனியனது நினைவுகளை தனது கனவின் மூலம் வாழ்ந்தாள்.

இளா ,மகி ,நிகிதா மூவரும் அவளது நிலையை எண்ணி கவலைப்பட்டனர். இனியன் யார் என்று அவர்களும் முடிந்த அளவு விசாரித்துவிட்டனர். ஒரு தகவலும் இல்லை.
இவ்வாறாக ஒரு மாதம் முடிவடைந்தது. முகில் முன்னிலும் சோர்ந்து மனநிலை முழுவதுமாக பாதிக்கப்பட்டு இருந்தாள்.

ஒரு நாள் , முகிலுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு நிகிதா ஹாஸ்பிடல் நோக்கி சென்றாள்.
போகும் வழியில் , ரமேஷ் அவனுக்கு காட்சியளித்தான்.
ரமேஷ் நிகிதாவிடம் பேச முயல அவளோ அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றாள்.

அவளது இந்த அலட்சியப்போக்கே அவனுக்கு கோபத்தை உண்டுபண்ணியது. அவன் அவளை நோக்கி " இனியன் "னென்று அழைத்தான்.

நிகிதா உடனே விக்கித்து நின்றாள். " இனியன பத்தி உனக்கு என்ன தெரியும் சொல்லு "

" நான் எதுக்கு உனக்கு சொல்லணும் "

"ப்ளீஸ் சொல்லு , பாவம் முகில் "

"நான் பாவம் இல்லியா ? கவலைப்படாதே அவ முழுசா பைத்தியம் ஆகிடுவா , அதுக்கு நான் கியாரண்டி "

"இல்ல , அவ குணமாகிடுவா "

"முடியாது ,நான் மனசு வச்ச முடியும் "

துளி துளியாய் - பகுதி 1Where stories live. Discover now