அத்தியாயம் - 6

827 55 17
                                    

ஐந்து வருடங்களுக்கு பிறகு,

ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. நிகழ்ச்சியின் தொகுப்புரையாளர் , " அகில இந்திய அளவில் சிறந்த தொழிலதிபராக தேர்ந்துஎடுக்கப்பட்டுள்ள இவர், இளவயதிலேயே இந்த விருதை பெரும் முதல் நபர் ஆவர். இந்தியா முழுவதிலும் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள கிராமங்களை தத்து எடுத்து இலவச கல்வி, இலவச மருத்துவம் , தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு என இன்றைய இளைஞர்களின் முன்னோடியாக இருந்துவருகிறார். நௌ லெட்ஸ் வெல்கம் அவர் ஹானரபில் பிரைம் மினிஸ்டர் டு கிவ் தி அவார்ட் டு தி என்.ஐ .எம் குரூப் ஆப் எம். டி மிஸ்டர். நீலேஷ் யாதவ்."

மைக்கில் தன் பெயர் உச்சரிப்பதை கேட்டு கூட்டத்திலிருந்து அடர் நீல நிற சூட் அணிந்து கம்பீரமாக மேடையேறி வரும் நீலேஷை அனைவரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஆறடிக்கும் கொஞ்சம் உயரமாய் ஒரு ராஜாவை போல் மிடுக்குடன் கம்பீரமாக நடந்து வரும் அவனை ரசிக்காத கண்கள் இல்லை. விருது வாங்கியவுடன் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு இறங்கி வேகமாக கார் நோக்கி நடந்தான் அவனுடைய பி.ஏ சோபனாவுக்கு ஆர்டர் பிறப்பித்துக்கொண்டே " சோபனா, கான்செல் ஆல் தி மீட்டிங். டுடே ஐ அம் கோயிங் டு என்ஜாய் வித் மை வைப் . டேக் கேர் ஆல். பை" அவனுடைய தனி பங்களா நோக்கி சென்றான்.

ஒரு சிறு மலைமீது அமைந்துள்ள அந்த பங்களா ,குட்டி அரண்மனை போன்று தன்னுடைய எஜமானிக்காக கட்டப்பட்டது.

ஷாஜஹான் மும்தாஜின் நினைவாக தாஜ் மஹாலை கட்டினான். ஆனால் நீலேஷ் தன்னுடைய உயிர்ப்பாதிக்காக இந்த குட்டி அரண்மனையை மலையோடு சேர்த்து வாங்கியிருந்தான்.

சுற்றிலும் பலவிதமான பூக்களுடன் அந்த இடத்தை ரம்மியமாகிக் கொண்டுயிருந்தன.

உள்ளே நுழைந்த நீலேஷ் , தன்னுடைய பிரத்தியேக அறைக்கு சென்றான்.

ஒரு 2 -பிளாட் அபார்ட்மெண்ட் போல் அந்த அறை இருந்தது.அங்கு சுவர் முழுவதிலும் அவன் மனையுடைய படம் , அவன் கைகளால் வரைந்த ஓவியங்கள், அவளை யாருக்கும் தெரியாமல் தன்னுடைய கேமெராவினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தன்னுடைய கைகளால் செய்த அவளது ஆள் உயர சிலை, இப்படி அவளது முகமே அறை முழுவதும்இருந்தது.

துளி துளியாய் - பகுதி 1Where stories live. Discover now