முதல் முத்தம் ...
சுற்றியிருக்கும் வெயிலிலும்
குளிர்ந்தது உன் இதழின் ஈரம் மூலம்என்னவளே
இன்னும் என்னை அறியவில்லையா
என்னை தணலில் எடுவதோ ஏனோ
உனக்காக ஏங்கும் எந்தன் உயிர்சத்தம்
உனது செவியை அடையவில்லையோஉந்தன் காதலுக்காக காத்துஇருக்கும் உந்தன் உயிரல்லவோ நான்..
தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவளை தனது மனைவி என்ற ஆக்கினான். அனைவரும் அந்த இனிய தருணத்தின் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.
"அம்லு ,இனிமே உன்ன என்கிட்ட இருந்து யாரும் பிரிக்க முடியாதுடி. இனியெல்லாமே நாம சந்தோசமா வாழுறத பாக்க போறாங்க" என்று அவளை தழுவி நெற்றியில் முத்தமிட்டான்.
அவளோ அந்த முத்தத்தின் உணர்வை அறிந்தவள் போல அவளது கை நடுங்கியது. நடுங்கும் அவளது கைகளை அழுத்தி நான் இருக்கிறேன் என்று உணர்த்தினான்.
டாக்டர் உள்ளே வர அனைவரும் ஒரு வித எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினர்.
' வாழ்த்துக்கள் நீலேஷ். அவர்களுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை . மனஅழுத்தம் மற்றுமே . விரைவில் குணமாகிடுவாள். ' என்று கூறி அனைவரது வயிற்றிலும் பால் வார்த்தார்.
நீலேஷ் , டாக்டரை காண சென்றான். அவரோ ' சரியான நேரத்தில் முகில் நம்முடைய கண்களுக்கு பட்டுஇருக்கிறாள். இன்னும் சிறிதுநாள் அவர்கள் இதே மருந்தை குடுத்துஇருந்தால்
அவளை நாம் எந்தவித சேதாரம் இல்லாமல் மீட்டுஎடுக்க முடியாது.இப்போது அவளுக்கு நான் தரும் டிரீட்மென்ட் இதுதான். இனியன் வரணும். அதாவது இனியனா நீங்க இருக்கனும் ' என்று விளக்கினார்.நீலேஷ் சற்று தயக்கத்துடன் வெளியில் இருந்த அனைவரிடமும் கூறினான்.
"டாக்டர் ஆலோசனைப்படி ,இனியன் அவகூட இருந்தாதான் அவளால முழுமையாக குணமாகமுடியும். அதற்கு நான் இனியனா அவகூட இருக்கலாம்னு முடிவு பண்றேன். நீங்களும் அவகிட்ட அதையே சொல்லுங்க. இது என்னோட காதலை நிரூபிக்க எனக்கு கிடைத்த அற்புத வாய்ப்பு அப்படினு நினைக்கறேன்.வாய்ப்பை நான் தவறவிடமாட்டேன். என்னோட காதலை அவ முழுசா புரிஞ்சுப்பா " என்றான்.

ESTÁS LEYENDO
துளி துளியாய் - பகுதி 1
Romanceஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........