திருமணம் நிச்சயத்திருப்பதால் , வீடே சந்தோசமாக இருந்தது. சென்னையிலே நிச்சியம் வைத்துவிட்டு முகூர்த்தத்தை ஊரில் வைத்துக்கொள்ளலாம் என்று முகில் வீட்டார்கள் நினைக்க ,
ராஜேஷ் அதற்கு மறுப்பேதும் கூறாமல் , ரிசெப்ஷன் சென்னையில் பெரிதாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
திருமண வேலைகள் இருப்பதால் , இங்க உள்ளவற்றை முகில் குடும்பமும் ரிசெப்ஷன் தேவையானதை ராஜேஷும் கவனிக்க சென்றுவிட்டனர். அதில் நீலேஷை அழைத்து நிச்சயத்திற்கு தேவையான துணி எடுக்க அனுப்பிவைத்தனர். தொழில் சம்பந்த வேலைகளை தன் நண்பர்கள் கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தான். நாளை அனைவரும் துணி எடுக்க செல்வதாக கூறி, அனைவரும் உறங்க சென்றனர்.
நீலேஷ் தனது அறையில் முகிலின் போட்டோவை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ,
" பார்த்தியாடி , உன்ன நான் கல்யாணமே பண்ணிட்டேன். ஆனா என்ன பக்கத்துல விடமாட்டேங்குறாங்க . அட்லீஸ்ட் நீயாவது என் பக்கத்துல வந்து கொஞ்ச நேரம் பேசிட்டுஇருந்த என்ன , "
" கல்யாணம்தான் முடிஞ்சுச்சு , அறிவுஇருக்கா ,பொண்டாட்டி கிட்ட போறப்போ சொல்லிட்டு போகணும்னு , நானே வந்து உங்கிட்ட எப்புடி அத்தனை பேர் முன்னாடியும் பேசமுடியும் .(முகில் போட்டோ வாய்ஸ் )"
நீலேஷ் : " என்னடி நீ பாக்குற பார்வையப்பாத்த , என்ன திட்டுறது போல இருக்கே " என்று அவளது புகைப்படத்துடன் பேசிக்கொண்டு இருந்தான்.
நீலேஷ் : " அப்புடியே இந்த கண்ணு , மூக்கு ,உதடு எப்புடி செல்லம் நீ இவ்ளோ அழகா இருக்க , அப்புடியே இந்த மச்சான் இப்போ பக்கத்துலருந்தேனு வை , உன்ன நேரப்பார்த்து கொஞ்சிட்டே இருப்பேன்." என்று கொஞ்சிக்கொண்டே இருக்கும்போது அவனுடைய மொபைல் ரிங் ஆனது.
நேர்லதான் பேசவிடுல , அட்லீஸ்ட் உன்ன கொஞ்சகூட விடமாட்டாங்க போல .என்று நொந்து கொண்டே அதை எடுத்து ," சொல்லு இளா , என்ன இந்த நேரத்துல " என்று தனது கடுப்பை மறைத்துக்கொண்டு கேட்டான்.
YOU ARE READING
துளி துளியாய் - பகுதி 1
Romanceஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........