அத்தியாயம் - 2

1.2K 70 29
                                    

டேய் ரிமோட் கொடு டா"

"போடி தரமாட்டேன் "

"டேய் dog ரிமோட் கொடு என்னோட சீரியல் மிஸ் ஆகிடும் கொடு டா "

"என்னது சீரியலா ? நீ எங்கேடி அதெல்ல பாக்குற , குழந்தை மாறி கார்ட்டூன் தானே பாக்குறே . நான் தரமாட்டேன் போடி , 7 donkey வயசாச்சு இன்னும் கார்ட்டூன் பாக்குற "

டேய் நீதாண்டா dog , donkey எல்லாமே , கடைசியா கேக்குறேன் இப்போ தரமுடியுமா முடியாத ?

சில்லுனு ஒரு காதல் படத்துல மில்லுக்கு வடிவேலு தன்னோட பெயர் வைக்கச்சொன்னதுக்கு

அவங்க wife ஒரு reaction கொடுப்பாங்க அதே மாறி மகி , மேலிருந்து கீழ பாத்துட்டு "முடியாது முடியாது போடி "

இதுக்குமேல சும்மா இருக்கக்கூடாது முகில் ,நம்ம வேலைய ஆரம்பிப்போம் . போய் மெயின் போர்டுல இருக்க பியூஸ் எடுத்துட்டு வந்துட்டா . வீட்டுல கரண்ட் போய்டுச்சுன்னு நினைச்சங்க . பக்கத்து வீட்டுல போய் ரதி பாக்குற அங்க கரண்ட் இருக்கு. மெயின் போர்டு போய் பார்த்தாள் . " முகில் இது உன்னோட வேலைய " ஞாயிற்றுக்கிழமை அதுவுமா இப்படி ரெண்டு பேரும் அராஜகம் பண்ணுறீஙகளே , இப்போ நான் எப்படி சமைக்குறது ?"

"அம்மில அரைச்சுக்கோ மம்மி", ஹையா அம்மி-மம்மி நல்லருக்குல.

"வர வர உனக்கு கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு காலையில பொட்டப்புள்ள கொஞ்சம் சீக்கிரமே எழுந்து அம்மாக்கு ஹெல்ப் பன்னாட்டியும் , ப்ரஸ் பன்னிட்டு குளிச்சுட்டு சாப்டுட்டு டிவி பார்க்கலாம்ல , மணி என்ன ஆகுதுன்னு பாத்தியா "

"மணி என்ன ஆகுதுன்னு சொல்லு மம்மி , எனக்கு தான் மணி பார்க்க தெரியாதே "

"அடிக்கழுதை ,1 ஆகப்போகுது இன்னும் கொஞ்சநேரத்துல உங்க அப்பா வந்து பசிக்கிது இவ்ளோ நேரம் என்ன பன்னிட்டு இருந்தானு என்ன திட்டுவாரு , எரும எழுந்தது 12 மணிக்கு ,எழுந்ததும் அவனோட சண்டை எப்போதான் இதெல்லாம் ஓயுமோ "

அதுக்குள்ள கரண்ட் வந்துடுச்சு ,மகி "அம்மா போய் சமையல் செய் மா , சும்மா அவள திட்டாதீங்க ,

துளி துளியாய் - பகுதி 1Where stories live. Discover now