காலையில் சூரியன் எழுமுன்பேபோர்வையில் இருந்து விலகி விட்டு முற்றத்திற்கு கோலம்போட்டுக் கொண்டிருந்தாள் நேத்ரா.
"நேத்ரா நீயும் இவளும் ஒன்னா தானே படிக்கிரீங்க. நீ எவ்வளவு பொறுப்பா காலைல எழுந்து வீட்டு வேலை எல்லாம் பார்த்து குளிச்சிட்டு காலேஜ் போக ரெடியாகுற. ஆனா இவ என்னடான்னா இன்னும் தூங்கிகிட்டே இருக்கா, நீயாச்சும் கொஞ்சம் புத்திசொல்ல கூடாது அவளுக்கு " என்று லக்ஷ்மி கேட்க நேத்ராவோ
"அட போங்கம்மா உங்க பொண்ணுக்கு அட்வைஸ் பண்றதுக்கு பதிலா நான் சும்மா இருக்கலாம்.நீங்க டெய்லி அவள போட்டு திட்டுறீங்கலேன்னு அவகிட்ட சொன்னேன் 'ஏண்டி டெய்லி அம்மாவாயால திட்டு வாங்குற.இதுக்கு நீநேரத்துக்கு எந்திரிச்சி அம்மாக்கு கூடமாட இருந்து வேலை செய்யலாம்லன்னு' கேட்டா அவ சொல்ரா 'அட போடி எங்கம்மா கூட இன்னும் எத்தனை நாளோ இல்ல எத்தனை மாசமோ. அதுக்கு அப்புறமா நான் கல்யாணம் பண்ணிகிட்டு இன்னொரு வீட்டிற்கு போக போறேன்.அது வரைக்குமாச்சும் என் அம்மா வாயால நான் திட்டு வாங்கிக்கிறேன்.நீகொஞ்சம் மூடிகிட்டு இரு ' அப்படின்னு சொல்ரா ஆண்டி" என்று கூற லக்ஷ்மி.
"அந்த வாயாடி இப்படித்தான் எல்லோரோடயும் வாய அடைச்சிடுவா.என்ன செய்ய சின்னவயசுல இருந்து ரொம்ப செல்லாம்கொடுக்காதீங்கன்னு அவருகிட்டசொன்ன்னா இருக்குறது ஒரே பொண்ணு அவளுக்கு செல்லம்கொடுக்காம யாருக்கு கொடுக்குறதுன்னு கேட்குறாரு. எல்லாம் அவரு கொடுத்த செல்லம்தா" என்று கூற நேத்ரா
YOU ARE READING
ஆகாஷனா
Non-Fictionமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...