தான் எழுதிய கதையின் பெயரிலேயே ஒரு வாசகர் அவனுடைய கதைக்கு வோட் பண்ணியதை நினைத்து வியந்தவனுக்கு அடுத்து அந்த ஐடியில் இருந்து "ஹாய்"என்று மெசேஜ் வர ஸ்தம்பித்து நின்றான்.சிறு வயது முதலே பெண்களிடம் அதிகம் பழகாமல் ஆண் நண்பர்களை மட்டும் கொண்டிருந்த கதிருக்கு இது கொஞ்சம் புதிதாக இருந்தது.பேஸ்புக்கில் கூட அவனுக்கு அவ்வளவாக பெண் நண்பிகள் கிடையாது.அவன் என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்த வேலை அடுத்த மெசேஜ்
"ஆகாஷனா- இருக்கீங்களா? எழுத்தாளரே"
"கரு(கதிருடைய வாட்பெட் ஐடி பெயர்)- இக்கேனே.நீங்கயாரு?"
"ஆகாஷனா -ஹஹா..என்ன ரைட்டர் சார் இப்படித்தான் எடுத்த உடனே யாருன்னுன் கேட்பீங்களா.உங்களுக்கு இருக்குற நூற்றுக்கணக்கான ரசிகர்கள்ள நானும் ஒருத்தர்"
"கரு-எது நூற்றுக்கணக்கான ரசிகர்களா ?ஐய்யோ நீங்க வேற.இது என்னோட முதல் ஸ்டோரி.வேலை டென்சன குறைக்குரதுக்காக சும்மா கதை எழுதலாம்னு வந்தேன்.எனக்கு கிடைச்ச முதல் வோட் உங்களோடது" என்று கூற அடுத 10 வது செக்கனில்
"Aakashana is follwing you" என்று நோட்டிபிகேசன் வர அவனோ
"தாங்க்ஸ் "என்று கூறினான்.
"ஆகாஷனா-எதுக்கு ரைட்டர் ஜி தாங்க்ஸ்லாம்.அப்புறம் நான் உங்கள பாலோ பண்ணதுக்கு நீங்க என்ன பாலோ பண்ணனும்னு கட்டாயம்லாம் இல்ல.ஓக்கே பாய்.அப்புறமா பார்க்கலாம்"என்று கூறி அவள் மறைய இங்கு அவனோ"பாய்" என்று ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு புன்னகைத்தான்.
------
"ஹேய் சந்தியா என்னடி பண்ற இன்னும் காலேஜ்கு ரெடியாகாம?உங்க அம்மா அப்பா உன்ன இங்க விட்டுட்டு யூ எஸ்ல இருக்காங்க என்றதுக்காக நீ இப்படி டெய்லி லேட்டா எந்திரிக்கிறது சரியில்லை.அப்புறமா நான் உங்க அம்மாக்கு கால் செஞ்சி உன்ன போட்டுக்கொடுக்க வேண்டி வரும் "என்று கூறிய தன் தோழி நந்தினியை சந்தியா இழுத்து கட்டிலில் தன் அருகில் அனைத்துக்கொண்டு தூங்க முற்பட நந்தினியோ"என்னடி பண்ற எங்கம்மா பார்த்தாங்கண்னா அவ்ளோதான் "என்று கூற சந்தியாவோ
YOU ARE READING
ஆகாஷனா
Non-Fictionமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...