(நந்தினியின் மொபைலில் இருந்த கீறலை ஞாபகம் வைத்திருந்த aathi1995 க்கு நன்றிகள்.மேலும் என் கதை ஓட்டம்இப்படித்தான் இருக்கும் என்று வாசகர்கள் கூறும் போது அடையும் சந்தோசத்திற்கு ஈடு வேறு எதுவுமில்லை.எனக்கென்று ஒரு தனியான கதை கூறும் வழியை ஏற்படுத்திக்கொண்டுள்ளேன் என்பதை நினைக்கும் மிகவும் சந்தோசமாக உள்ளது)
கதிரை அழைத்துவர சென்ற சுமன் அவனைக்கண்டதும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து
"மச்சி உனக்கு பெரிய ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்னான்னு சொல்லு பார்க்கலாம்?" என்று கேட்க அவனோ எரிச்சலுடன்"என்ன நீ ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறியா?" என்றவனை முறைத்தவன்
"ஏன்டா இவகிட்ட என்ன போட்டுக்கொடுக்குறதுலயே இரு, அதில்லடா உன் வாழ்க்கைல நீ ரொம்பவும் எதிர்பார்த்த ஒன்னு. நீ உனக்கு வேணும்னு ரொம்ப ஆசைப்பட்ட ஒன்னு உனக்காக ஐய்யா ரொம்ப கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சிருகேன்" என்றவனை வீணா முறைக்க
"சரி சரி நான் கண்டுபிடிக்கல நாங்கல்லாம் சேர்ந்து கண்டுபிடிச்சிருக்கோம்"என்று கூற உடனே கதிர்
"டேய் கண்டுபிடிச்சிருக்கேன்னா யு மீன் ஆகாஷனா"என்றவனை இறுக்கி அனைத்தவன்
"யெஸ்டா, அவள கண்டுபிடிச்சாச்சு. சாரி அவங்கள கண்டுபிடிச்சாச்சு" என்று கூற கதிர் சந்தேகமாக பார்க்க வீணா
"உனக்கு சந்தேகமே வேணாம் கதிர் நிஜமாவே ஆகாஷனாவ கண்டுபிடிச்சாச்சி.உன்ன ரிசீவ் பண்ண அவளையும் நாங்க ஏர்போர்ட்க்கு கூட்டிட்டு வந்திருக்கோம். அப்புறம் அவளுக்கு கல்யாணாம்லாம் ஆகலை. சோ உன் ரூட்டு இனி க்ளியர்" என்று கூற சுமன் வீணாவுக்கு மட்டும் கேட்கும் விதமாக
"ஏண்டி கல்யாணம் ஆகலன்னு சொன்ன"என்று கூற அவளும்
"இல்லடா கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா இருக்கட்டும்னுதான் அப்படி சொன்னேன். பிகாஸ் ஆல்ரெடி கல்யாணமாகி டிவோர்ஸ் பண்ணிக்க இருக்கான்னு சொன்னா சப்போஸ் அவன் அது நந்தினின்னு கண்டுபிடிச்சிடலாம்.சோ சாருக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்" என்றவளை சுமனும் சரி என்று கூறி கதிரின் கண்களை துணி கொண்டு கட்ட முயல
YOU ARE READING
ஆகாஷனா
Non-Fictionமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...