6 மாதங்களுக்கு பின்,
"மச்சி நாளைக்கு காலைல அவனுங்கள அடிக்கிறோம், நம்ம யாருன்னு காட்டுறோம்"என்று வந்த கணவனை நந்தினி"யார்கிட்ட பேசிகிட்டு வர்றீங்க" என்று கேட்க அவளை பார்த்தவன்
"இல்லடா லாஸ்ட் வீக் ஒரு டீம்மோட கிரிக்கெட் மேட்ச் ஆடபோனோமா, லாஸ்ட் ஓவர்ல தோத்துட்டோம். ரொம்ப ஓவரா எங்கள நக்கல் பண்ணிட்டானுங்க. அவனுங்களுக்கு நாங்க யாருன்னு காட்டனும்" என்று கூற அவள்
"அப்போ நாளைக்கும் விளையாட போறிங்களா?" என்று கேட்க
"ஆமான்டா பட்டுக்குட்டி. காலைல ஆறு மணிக்கு போயிட்டு எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன். சன்டே எப்படியும் நீ எந்திரிக்க ஒன்பது மணி ஆகுமேடா" என்று கூற அவளும் எதுவும் கூறாமல் இருந்தால்.விளையாட்டு ஆர்வத்தில் நந்தினியின் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை அவன் கவனிக்கவில்லை.
ஞாயிறு காலை நேரகாலத்தோடு எழுந்து நந்தினிக்கும் சேர்த்து காப்பி போட்டு விட்டு அவளை எழுப்பாமல் தூங்கட்டும் என்று நினைத்தவன் விளையாட சென்றான். இன்றும் அவர்கள் அணி ராஜீவின் சொதப்பலான ஓவரால் தோல்வியை தழுவ வீடு வந்தவன் நந்தினி எழுந்து காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தால்.ராஜீவ் குளித்து வந்ததும் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க அப்போதுதான் நந்தினியின் பாராமுகம் கண்டவன் எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு சமையல் அறையில் இருந்த நந்தினியின் பின்புறமாக சென்று அவளை அனைக்க அவளோ
"விடுங்க ராஜீவ் எனக்கு சமைக்கிற வேலை இருக்கு" என்றாள்.நந்தினி ஏதோ தன் மீது கோபமாக உள்ளால் என்பது மட்டும் அறிந்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக டிவி பார்த்துக்கொண்டிருந்தான்.பகல் நேரம் ஆனதும் அவனுக்கு ஜூஸ் கொடுக்க வந்தவளை
"இப்போ எதுக்கு நீ இப்படி மூஞ்ச தூக்கி வெச்சிக்கிட்டு இருக்க" என்று கேட்க அவனை பார்த்து முறைத்தவள் பதில் எதுவும் கூறாமல் மீண்டும் சமையல் அறைக்குள் செல்ல கோவம் கொண்ட ராஜீவ்
DU LIEST GERADE
ஆகாஷனா
Sachbücherமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...