ஷனா - 9
அன்றைய சம்பவத்தின் பின் கிஷோர் இவர்களை எதுவும் தொல்லை செய்யாமல் இருந்தான்.டிறைனிங்க் முடித்து வந்து 2 நாட்களில் திடீரென்று ஆகாஷனாக்கு புதிய நம்பரில் இருந்து கால் வர அதை பிக் செய்தவள்"ஹலோ ஷனா, நான் கிஷோர் பேசுரேன்" என்று கூற முதலில் அவனின் காலை கட் செய்யலாமா என யோசித்தவள் தன் எண்ணத்தை மாற்றி
"சொல்லு கிஷோர் என்ன புது நம்பர்ல இருந்து கூப்பிடுற"என்று கேட்க அவனோ
"அன்னைக்கு என் மொபைல் மிஸ் ஆச்சி.அது இப்போ அஜய் கிட்ட இருக்கு.என்னால அவன் கிட்ட போய் என்னோட போன கேட்க முடியாது.தயவு செஞ்சி கொஞ்சம் அவங்கிட்ட அத அத வாங்கி கொடுக்கிறியா?" என்று கேட்க அவளோ நக்கல் தொனியில்
"எது எங்கள வீடியோ எடுத்து ப்ளாக்மெயில் பண்ணியே அந்த மொபைலா" என்று கேட்க அவனோ
"ஆகாஷனா நான் பண்ணது தப்புதான்.அது என்னோட பிறந்த நாளைக்கு அப்பா வாங்கி கொடுத்தது.தயவு செய்து அவன் கிட்ட இருந்து வாங்கி கொடுத்துடு" என்று கூற இப்பொழுது இவனை நம்புவதா வேண்டாம என்று யோசித்தவள்
"சரி கிஷோர் உன்ன இரண்டாவது தடவையா நம்புறேன்.இந்த முறையும் நீ எங்களுக்கு துரோகம் செய்யனும்னு நினைக்காத"என்று கூற அவள் பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளாமல் அவனிடம் இயல்பாக பேசியது கிஷோருக்கு ஏதோ போன்று இருந்தது.கிஷோரிடம் பேசிவிட்டு அஜய்க்கு கால் செய்த ஆகாஷனா கிஷோரிடம் பேசியது பற்றி கூறி அவனது மொபைல கேட்க
"ஈவினிங்க் உங்க வீட்டு பக்கத்துல இருக்குற பார்க்குக்கு வா.அங்க வச்சி பேசிக்கலாம்"என்று கூற ஆகாஷனாவும் நேத்ராவை அழைத்துக்கொண்டு பார்க்கிற்கு சென்றால்.அங்கு அஜய்யை கண்டவர்கள் அவன் அருகில் சென்று பேச ஆரம்பிக்க அவன்
"நீ என்ன லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா.அவன் மொபைல கேட்டா நீ எந்த தைரியத்துல கொடுக்க போறேன்னு சொல்ற.உங்க வீடியோ இன்னும் அந்த மொபைல்ல இருக்கு.அது ஐபோன்னதால அன்லாக் பண்ணவும் முடியல"என்று கூற ஆகாஷனா அமைதியாக இருக்க அவன் நேத்ராவை பார்த்து பார்வையால்
YOU ARE READING
ஆகாஷனா
Non-Fictionமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...