கற்பனை 40

2.6K 121 274
                                    

சந்தியாவும் கதிரும் இந்தியா வந்ததும் அவர்களை அழைத்துவர ராஜீவ் ஏர்போர்ட் சென்றான். நந்தினி கர்ப்பமாக இருப்பதால் அவளால் செல்ல முடியவில்லை. இருவரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்து பரஸ்பரம் விசாரித்த பின் தோழிகள் இருவரும் சமையளறைக்குள் புகுந்து கொண்டனர்.

"என்னடி மாசமா இருக்கேன்னு சொன்ன.தலை சுத்துறது வாந்திலாம் வருதா இப்போ" என்று சந்தியா கேட்க

"அத ஏண்டி கேட்குற இப்போதான் ஸ்டார்ட் ஆகி இருக்கு. ஆனா ரொம்ப டயர்ட் ஆகிடுறேன். அதனால அவரத்தான் பாத்துக்க முடியல. அதான் கொஞ்சம் கவலையா இருக்கு" என்று கூற தன் தோழியை சந்தோசமாக பார்த்தவள்

"ஏன் நந்தினி கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காத, ராஜீவ் உன்னோட கடந்தகால வாழ்க்கைய வெச்சு ஏதும் குத்திக்காட்டி பேசலையே" என்று கேட்க சிரித்தவள்

"அத ஏண்டி கேட்குற, நாங்க சண்டை போட்டுக்கிட்டா அது பெரிசாதான் போகும். ஆனா என்ன சண்டை போட்டு கொஞ்ச நேரத்துல சமாதானம் ஆகிடுவோம்" என்று கூற அவள் கூறவருவதை புரிந்து கொண்டாள் சந்தியா. உடனே நந்தினி

"உன் லைப் எப்படி போகுதுடி" என்று கேட்க சந்தியா உற்சாகமாக

"ஹேய் நிஜமா சூப்பரா போகுதுடி. கதிர் மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க நான்
கொடுத்து வெச்சிருக்கனும்" என்றவள் அப்படி கூறியது நந்தினியின் மனதை
பாதிக்குமோ என நினைத்தவள்

"ஹேய் நான் தப்பா ஏதும் நினைச்சு சொல்லலடி சாரிடி" என்று கூற புன்னகைத்த நந்தினி

"நம்ம ரெண்டு பேரும் எவ்வளவு க்லோஸ் ஆ இருந்தோம். ப்ரெண்டோட கணவனை இன்னொரு ப்ரண்ட் கல்யாணம் பண்ணிக்கிட்டதால இவ்வளவு அன்டர்ஸ்டான்டிங்க் இருக்குற நமக்குள்ளயே எவ்வளவு யோசிச்சி பேச வேண்டியிருக்குள்ள. என்னதான் நம்ம சமூகம் என்ன சொன்னாலும் பரவாயில்லை எனக்கு என் லைப்தான் முக்கியம்னு சில காரியங்கள் செஞ்சாலும் அதுனால வர்ற தாக்கத்த நம்மளால சில நேரங்கள்ள தாங்கிக்க முடியாதுல்ல. அட்லீஸ்ட் நம்ம இப்போ இவ்வளவாச்சும் பேசிக்கிட்டு இருக்கோம். ஹால்ல கதிரும் ராஜீவும் என்ன பேசுறதுனே தெரியாம
முழுச்சிக்கிட்டு இருப்பாங்க. ரெண்டு பேருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். ஏதும் பேசினா மத்தவரோட மனசு பாதிச்சிடுமோன்னு .டிவில ஐபிஎல் போறதால சரி இல்லைன்னா அவங்க நிலைமை ரொம்ப பாவமா இருக்கும்"என்று கூற சிரித்த சந்தியா

ஆகாஷனாWo Geschichten leben. Entdecke jetzt