கற்பனை 8

1.2K 146 147
                                    

ஷனா-5

என்ன இருந்த போதும் கிஷோர் கூறியதை செய்வதற்கு நேத்ராவிற்கு பயமாகவே இருந்தது.இதில் கொஞ்சம் இசகு பிசகானாலும் (தவறு நடந்தாலும்) காலேஜை விட்டே நீக்கப்படக்கூடியளவுக்கு ஆபத்து இருந்தது.அதே போல வேறு ஏதும் தவறு நடந்தால் ஆயுளுக்கும் கிஷோர் கூறுவதை கேட்டது நடக்க வேண்டியேற்படும் என்பது அவளுக்கு தெளிவாகவே புரிந்தது.அஜய் மேல் இருந்த கோபத்தில் ஆகாஷனா செய்யும் காரியங்கள் யோசிக்காமல் எடுக்கப்பட்டவை என்பது நேத்ராவுக்கு தெளிவாகவே புரிந்தது.ஆத்திரக்காரனுக்கு புத்தி மந்தம் (பழமொழி சரியாப்பா) என்று பெரியவர்கள் சும்மாவா கூறினார்கள்.இருந்தாலும் இந்த விடயத்தில் ஆகாஷனா மனம் நோகாதபடி அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணிய நேத்ரா ,சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று எண்ணினால்.உடனே தனது மொபைலை எடுத்தவள் தங்கள் காலேஜ் வாட்ஸப் க்ரூப்பில் தனக்கு தேவையான நபரின் நம்பரை எடுத்து கால் செய்தவள்

"ஹலோ நான் செகண்ட் இயர் நேத்ரா பேசுறேன்.ஆகாஷனாவோட ப்ரெண்டு" என்று கூற மறுமுனையோ

"சொல்லுங்க" என்றது.
------------

இண்டஸ்ட்றியல் டிரைனிங்க் போகும் நாளும்வர நேத்ராவை தனியாக அழைத்த லக்ஸ்மி

"நேத்ரா உனக்கு எல்லாமே தெரியும் என்றதாலதான் நான் ஆகஷனாவ இந்த டிரிப் கு அனுப்புறேன்.ஆரம்பத்துல முடியாதுன்னுதான அவளோட அப்பா சொன்னாரு.ஆனா நாந்தான் உனக்கு எல்லாமே தெரியும் என்று அவருகிட்ட சொல்லி சம்மதம் வாங்கியிருக்கேன்.நீதாம்மா அவள சரியா பார்த்துக்கனும்.ஏதும் ஏர்ஜண்ட்னா உடனே எனக்கு கால் பண்ணு சரியா" என்று கூறியவரை நேத்ரா

"அம்மா நீங்க கவலையே படாதீங்க.ஆகாஷனா என்னோட பொறுப்பு" என்று கூற யோகா செய்து முடித்துவிட்டு அவ்விடத்துக்கு வந்த ஆகாஷனாவை பார்த்து நேத்ரா

"ஆமா நீ டெய்லி யோகா பண்றியா எதுக்குடி "என்று கேட்ட நேத்ராவை ஆகாஷனா

ஆகாஷனாWo Geschichten leben. Entdecke jetzt