ஆகாஷனா - எதனால், யாருக்கு

916 57 50
                                    

ஹாய் வட்டீஸ்,
இந்த பதிவு கதை முடிந்ததும் கடைசியாக எழுத வேண்டும் என்று நினைத்த ஒன்று.ஆனால் இன்று இதை பதிவிட காரணம் வாட்பெட்டில் எனக்கும் மிகவும் பிடித்த என் தங்கைகளான priyadharshini12 Nivethamagathi இவர்களின் எதிர்மறையான பின்னூட்டங்களே.பலருக்கு இருந்த கேள்விகளை அவர்கள் தைரியமாக பகிரங்கமாக கேட்டதற்கு முதலில் நன்றிகள்.எனக்கு எப்போதும் மிகவும் விருப்பமானது எதிர்மறையான பின்னூட்டங்கள் என்பது அவர்கள் இருவருக்கும் நன்றாகவே தெரியும்.

முதலில் இந்த கதை சம்பந்தமாக பலரிடம் கலந்தாலோசித்தேன்.அதில் நான் அறிந்த விடயம் திருமணமானவர்கள் இந்த கதையை பார்க்கும் விதமும் திருமணமனமாகாதவர்கள் பார்க்கும் விதமும் முற்றிலும் நேர்மாறு.

திருமணமான பலர் இந்த கதையின் கருவை வரவேற்றார்கள்.திருமணமனமாகாதவர்களுக்கு இந்த கதையின் கரு பிடிக்கவேயில்லை.அதற்கு காரணமும் உண்டு.திருமணமனமான பலர் நிஜ உலகிலும் திருமணமாகாதவர்கள் பேண்டசி உலகிலும் சஞ்சரிப்பதுதான் நிஜம்.இது இப்படி இருக்க ……

எல்லா கதைகளை போலவும் இந்த கதை வாசகர்களை சந்தோசப்படுத்த எழுதப்பட்ட ஒன்றல்ல.இந்த கதையை படிக்கும் வாசகரின் மனநிலையை பொறுத்து இந்த கதையை அனுகும் முறை மாறும்.அப்படி ஒரு கதையை எழுத ஆசைப்பட்டு இன்று அது முடியும் தருவாயில் இருக்கின்றது.அதற்கு முதலில் இறைவனை புகழ்ந்தவனாக…

சில கதைகள் யார், எப்படி படித்தாலும் காதல்,காமடி,நட்பு,ரொமான்ஸ் என ஒரு வட்டத்துக்குள்ளேயே இருக்கும்.ஆனால் இந்த கதை இரு சாராராரின் மனநிலையை அறிந்து,அறிய எழுதிய ஒன்று.காரணம் இந்த கதையில் வரும் எந்த கதாபாத்திரமும் மற்ற கதைகளில் வருவது போல நம் எல்லோருக்கும் முன்மாதிரியான பாத்திரங்கள் இல்லை.மாறாக ,

சமூக வலைத்தளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரனமாக கதிரும்,மிக அரிதாக நடக்க கூடிய விடயமான ஒரு ஆண் தன்னை மட்டுமே காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நந்தினியும், தோழியின் கணவனை திருமணம் செய்த சந்தியாவும்,தான் காதலித்த பெண் தனக்கே கிடைக்க வேண்டும் என்று அவளின் விவாகரத்துக்காக காத்திருந்த ராஜீவ் என நான்கு வகை வித்தியாசமான முகங்களை கொண்ட நபர்களை பற்றிய கதை.
இந்த கதையை ஒருகதையாக பார்க்கலாம் அல்லது நாம் சமூகத்துக்கு பயந்தால் எப்படி எல்லாம் வாழ கூடாது ,எதை எல்லாம் துணிந்து செய்ய கூடாது என்பதையும் என்னதான் சமூகத்தை நாம் கவனத்தில் கொள்ளவில்லை என்றாலும் நாம் ஒரு கட்டத்தில் சமூகத்துக்கு பயந்துதான் ஆகவேண்டும் என்ற கருத்தையும் இதில் சொல்ல முயன்று ஓரளவு வெற்றியும் கொண்டேன்.
எனக்கு சமூகத்திடம் இருந்த ஒரு சில கோபங்களை ஆங்காங்கே வெளிக்காட்டியும் இருந்தேன்.இந்த கதை எதற்காக எழுதினேன் என்பதை ஓரளவுக்கு தெளிவு படுத்தியுள்ளேன்.
இந்த கதையை இன்னும் 5 வருடங்களின் பின் படிக்கும் போது கண்டிப்பாக இன்றிருக்கும் அதே மனநிலையில் அன்றும் இருக்கமாட்டார்கள் என்பது என் கணிப்பு,சில நேரங்களில் அது தவறாகவும் ஆகலாம்.

ஏதோ என்னால் முடிந்த வரை விளக்கம் கொடுத்துள்ளேன்.மேலதிகமாக ஏதும் சந்தேகம் என்றால் பின்னூட்டமிடுங்கள்.

ஆகாஷனாWhere stories live. Discover now