மூன்று மாதங்களின் பின்........யூ எஸ்சில்
வேலை விட்டு வீட்டிற்கு வந்த சந்தியா தனக்கு முன் இருந்த மேசையில் மது பாட்டிலுடன் உட்கார்ந்திருந்த கதிரை கண்டும் காணாதது போல அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தவள் கிட்சன் செல்ல அங்கு எல்லாமே சமைத்து தயாராக இருந்தது. உணவை மேசையில் எடுத்து வைத்த்வள்
"சாப்பிட்டுட்டு குடிக்க போறீங்களா, இல்ல குடிச்சிட்டு சாப்பிட போறீங்களா" என்று கேட்க கோவம் கொண்ட கதிர் மது பாட்டிலை திறந்து அப்படியே மட மட வென்று குடித்து உவ்வேக் என்று வாந்தியெடுக்க ஓடிச்சென்ற சந்தியா
முதலில் அவனின் வாந்தியை துடைக்க முற்பட கதிரோ அவளின் கையை தட்டி விட்டான். அவன் அவளின் கையை தட்டி விட்ட கோபத்தில் சந்தியா அவனை அறைய என்ன
நடக்கின்றது என்று புரியாமல் கதிர் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு சந்தியாவை பாவமாக பார்த்தான்."ஆமா இப்படி அப்பாவியா முகத்தை வெச்சிக்கிறதுல ஒன்னும் குறைச்சல்
இல்ல.ஆமா யாரு உங்களுக்கு இத வாங்கிக்கொடுத்தா"என்று கேட்க அவன் திருதிரு எனும் முழிக்கும் வேலை கதிரின் செல்போன் ஒலிக்க அதில் தீபக்கின் பெயர்
(என் உயிரினில் நீ ரேனுவோட வில்லன்,நண்பன்,காதல் கணவன்) வர இவன் எதற்கு கால் பண்ணுகின்றான் என நினைத்தவள் போனை ஸ்பீக்கரில் போட"கதிர் முதன் முதலா ஒரு ஹெல்ப் கேட்டீங்கன்னு பண்ணேன் தயவு செஞ்சி
நாந்தான் உங்களுக்கு சரக்கு வாங்கி கொடுத்தேன்னு மட்டும் அவள்ட்ட
சொல்லிடாதீங்க. நான் சரக்கே அடிக்க மாட்டேன்.அப்படியிருக்கும் போது
உங்களுக்கு வாங்கி தந்து அதனால இந்த சரக்கு மூலமா மாட்டிக்குவோமோன்னு
பயமா இருக்கு"என்று கூற பத்ரகாளியாக மாறியவள்"டேய் நினைச்சேன்டா. யூ எஸ் ல கதிருக்கு ரொம்ப க்லோஸா இருக்குறது நீ
மட்டும்தான்.நாளைக்கு நீ ஆபீஸ் வா உனக்கு ஸ்ட்ரெஸ் மெனெஜ்மென்ட்ல ஒரு
லெக்சர போட்டு உன் தாலிய அறுக்குறேன்" என்று கூற மறுமுனையில் பதறிய தீபக்
BINABASA MO ANG
ஆகாஷனா
Non-Fictionமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...