"கரு- கண்டுபிடிச்சிட்டேனே, அது அவங்க பேரு கூட ஏதோ நடுவுல வர்ர ரெண்டு எழுத்தும் அ,ஆ இப்படின்னு வரும்"
"ஆகாஷனா-ஓய் என்ன கலாய்க்கிறியா"
"கரு-என்னது ஓய் ஆ. என்னம்மா மரியாதையெல்லாம் குறையுது"
"ஆகாஷனா-ஆமா பொண்னுங்க கிட்ட கடலை போட டிரை பண்ற உங்கள மாதிரி ஆளுங்கள வேற என்ன சொல்லுவாங்க.ஓய்னு சொன்னதே பெருசு"
"கரு- ஹல்லோ, முதல்ல நீங்க பொண்ணான்னே எனக்கு தெரியாது.இதுல கடலை போட்டுட்டாலும்"
"ஆகாஷனா- என்ன ரைட்டர் சார் முன்னாடிலாம் ஒரு வார்த்தை டைப் பண்ணவே கீபோர்ட் தந்தி அடிக்கும்,இப்போலாம் செம்ம போர்ம்ல இருக்கீங்க போல"
"கரு-ஒரு உண்மைய சொல்லட்டா ஷனா.எனக்கு லைப்ல கேர்ல் ப்ரெண்ட்ஸே இருந்தது இல்ல.படிக்கிறப்போ வேலை செய்ற இடத்துலன்னு சில பொண்ணுங்க இருக்காங்க .ஆனா யாரும் எங்கிட்ட நீங்க பேசுற மாதிரி இவ்வளவு உரிமையா பேசினது இல்லைங்க"
"ஆகாஷனா-அது எனக்கு நீங்க ஸ்டார்ட்ல மெசேஜ் பண்ணும் போதே தெரிஞ்சது"
"கரு- என்ன தெரிஞ்சது?"
"ஆகாஷனா-நீங்க ஒரு ஆஞ்சனேயர் பக்தன்னு.ஹஹா"
"கரு-சரி ஷனா எனக்கு அப்டேட் எழுதனும்.எப்படி கண்டினியூவா எழுதுறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்போதான் உங்க கிட்ட இருந்து மெசேஜ் வந்தது.உங்க கிட்ட பேசுனதுல எனக்கு எழுத ஐடியா கிடைச்சிது.நான் எழுதிட்டு வரேன், பாய்"
"ஆகாஷனா-ஓக்கே ஜி பாய்.பெஸ்ட் ஆப் லக்"
-----------------
ஷனா-615 நிமிடங்களில் அவர்களிடம் வந்த அஜய் எதுவும் பேசாமல் தனது மொபைலை வாங்கியவன்
"ஆமா என் மொபைல் உங்களுக்கு எப்படி கிடைச்சது" என்று கேட்க ஆகாஷனாவோ
"அது அது....இல்லை பஸ்ஸ விட்டு இறங்கும் போது கீழ கிடைச்சது"என்றவளை அஜய்யோ முறைத்து
"ஓஹ்ஹ்.,அப்போ இந்த மொபைல கண்டதும் அது என் மொபைல்னு உனக்கு எப்படி தெரிஞ்சது" என்று இன்வஸ்டிகேசன் ஆபீசர் போல கேள்வி கேட்டவனை என்ன பதில் சொல்வது என்று புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தவள் நிலமையை சமாளிக்கும் பொருட்டு
BINABASA MO ANG
ஆகாஷனா
Non-Fictionமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...