ராஜீவின் தங்கையின் திருமண ரிசப்சனுக்கு வந்திருந்த சுமன் வீணா தம்பதிக்கு ஒரு வயதில் மகள் இருந்தாள்.தன் குட்டி தேவதையுடன் வந்தவர்களை வரவேற்றான்.. பங்சன் முடிந்ததும் சுமன்,வீணா,நந்தினி, சந்தியா மற்றும் ராஜீவ் ஐவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது சுமன் கவலையாக நந்தினியை பார்க்க அவள் முகமோ எந்த கவலையும் இல்லாமல் தெளிவாக இருப்பதை கண்டவன்"கதிரும் நீங்களும்...."என்று பேசத்தொடங்க உடனே சந்தியா
"ஹேய் சுமன் எங்களுக்கு எல்லாமே தெரியும்.அப்புறம் அவங்க எடுத்த முடிவுனால அவங்க லைப்ல நல்லதுதான் நடக்க போகுது" என்று கூற இதுவரை நடந்த எதுவும் தெரியாமல் மெதுவாக வீணாவிற்கு மட்டும் கேட்கும் விதமாக
"ஹேய் கதிர் என்னமோ இவ நந்தினியோட பெஸ்ட் ப்ரெண்ட் அப்படின்னு சொல்லுவான். ஆனா இவ என்னடான்னா அவங்க ரெண்டு பேரும் டைவோர்ஸ் வாங்க போறது அவங்க வாழ்க்கைக்கு நல்லதுன்னு சொல்றா. ஆக்சிடண்ட் ஆனதுல அவ மூஞ்சி மாதிரி அவ மூளையும் சுருங்கிடிச்சோ" என்று கூற அது சந்தியாவுக்கு சரியாக அவள் காதுகளில் விழ சுமனை நோக்கி
"ஹலோ சார், பி கூல். உங்களுக்கு இவங்க ரெண்டு பேருக்குள்ளயும் நடந்தது கதிர் மூலமா மட்டும்தான் தெரியும். ஆனா கதிருக்கே தெரியாமா லாஸ்ட் ஒன் வீக்கா என்ன நடக்குதுன்னு எங்க 3 பேருக்கு மட்டும்தான் தெரியும்"என்று கூற சுமன் அவளை நக்கலாக பார்த்து
"அப்படி என்ன நடந்திச்சி., எப்படி குயிக்கா டைவோர்ஸ் வாங்குறதுன்னு ரிசர்ச் பண்ணீங்களா" என்று கேட்க சந்தியா கூலாக
"நாங்க ஆகாஷனா யாருன்னு கண்டுபிடிச்சிட்டோம் "என்று கூற சுமனும் வீணாவும் உச்சபட்ச ஆச்சரியத்துக்கு உள்ளானார்கள்.
"என்ன சார் இப்படி ஷாக் ஆகிட்டீங்க" என்று சந்தியா கேட்க
"நோ வே அது முடியவே முடியாது" என்று கூற
"அது ஏன் முடியாதுன்னு இவ்வளவு உறுதியா சொல்றீங்க" என்று கேட்ட சந்தியாவிடம்
YOU ARE READING
ஆகாஷனா
Non-Fictionமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...