வாட்பெட்டில் இருக்கின்ற அண்ணா,தங்கை,அக்கா,தம்பி என்ற உறவுகள் எல்லாம் பொய் என்று கூறவில்லை.ஒரு சிலர் அப்படி நினைப்பது தவறு என்றே கூற வந்தேன்.கதிரின் என்னத்திற்கு சுமன் கூறிய பதில்தான் எனது பதிலும்.
இதை நான் கூற காரணம் என்னுடைய முந்தைய அப்டேட்டில் கதிர் "அண்ணா "என்று போடப்பட்ட சில பதிவுகளை பற்றி நக்கலாக கூறுவது போல காட்டியிருந்தேன்.நிஜமாக அது யாரையும் புன்படுத்தும் நோக்கில் கூறப்பட்டது கிடையாது.கதைக்கு
தேவை என்பதாலேயே அந்த இடத்தில் அப்படி எழுத வேண்டியதாக போனது.அதுவும் என்னை நோக்கியே அந்த விமர்சனத்தை வைத்தேன்.கதிர் அப்படி கூறினாலும் சுமனின் பதில் அவனது வாயை மூட வைத்தது.எனது கருத்தும் சுமனின் கருத்தை ஒத்ததுதான்.யார் மனமாவது புன்பட்டிருந்தால் மன்னிக்கவும்.கடைசியாக ஒரு உண்மையை கூறலாம் என என்னுகின்றேன்.ரக்க்ஷா பந்திட்காக தாராவும்,வாசுகியும் எனக்கே எனக்காக இட்ட பதிவுகளும் எனக்காக இட்ட மற்றைய பதிவுகளையும் அடிக்கடி படித்து சந்தோசப்பட்டுக்கொள்வேன்.விளையாட்டாக ஆரம்பித்த எனது எழுத்துக்கள் மூலம் எனக்கு எப்படியான் உறவுகளை கொடுத்துள்ளது என்று எண்ணி.
----------------+
ஹாஸ்பிடல் வந்து சேர்ந்த கதிர் அங்கு தனது மாமாவும் அத்தையும் இருக்கும் நிலமை பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.இருவரும் தங்கள் வாழ்க்கையாக கருதிய ஒரே மகளின் நிலமையை எண்ணி அழுது அழுது ஓய்ந்திருந்தனர்.அவர்களிடன் வந்த டாக்டர்
"தேவிக்கு தலைல பலமா அடிபட்டிருக்கு.மத்தபடி பெருசா ஏதுமில்ல ஆனா மத்த பொண்ணுக்குதான்...."என்று கூறிய டாக்டர் சொன்னதைக்கேட்டு அங்கிருந்த எல்லோருக்கும் மிகவும் கவலையாகி போனது.என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்க கதிர் தேவியின் தாய் தந்தையருக்கு ஆறுதல் கூறியவன் திடீரென்று அவனின் மொபைல் சினுங்க அதை எடுத்து பார்க்க சுமனின் கால் என்று அறிந்தவன்
"சொல்லுடா என்னாச்சி.இங்க பெரிய ப்ராப்ளம்டா, தேவிக்கு தலைல அடி வேற எதுவுமில்ல.ஆனா மத்த பொண்ணு பாவம்டா அவளுக்குத்தான் "என்று மற்றவளுக்கு நடந்ததை கூற சுமன் மிகவும் கவலைப்பட்டவன்
VOCÊ ESTÁ LENDO
ஆகாஷனா
Não Ficçãoமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...