சிந்தனை சிதறாதே....
என்னை சகோதரனாக நினைப்பவர்களுக்கு மட்டும் இந்த பதிவு.....
சமூக வலைத்தளம் என்பது வரமா சாபமா என்று கேட்டால் இன்றைய நாட்களில் அது சாபம் என்றே கூற வேண்டும்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு.உங்களின் சொந்த விபரங்களை இங்கு பகிர வேண்டாம் என்று ஒரு தடவை கேட்டுக்கொன்டதுக்கு இனங்க பலர் அதை தவிர்த்துள்ளனர்.என்மீது அவர்கள் கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் அது வெளிப்படுத்துகின்றது.அதற்கு முதலில் நன்றி கூறியவனாக....
சில பதிவுகளை நாம் கானும் போது மிக வருத்தம் அளிக்கின்றது.காரணம் அந்த பதிவுகள் மோசமானவை அல்ல மாறாக அந்த பதிவுகளை வைத்து பதிவிட்டவரை தவறான வழியில் மற்றவர்கள் பயன்படுத்த வழி வகுக்கின்றது.உதாரணமாக
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.--வாழ்த்து தெரிவிப்பதும் தெரிவிக்காமல் விடுவதும் அவரவர் விருப்பம்.ஆனால் அதை பொது வெளியில் இடும் போது அது எவ்வகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சில சகோதர சகோதரிகளுக்கு புரியவில்லை.உங்களுக்கு பிடித்த ஒருவருக்கு வாழ்த்து அல்லது ஏதும் செய்தி சொல்லவேண்டுமென்றால் தனியாக மெசேஜ் செய்ய முடியும்.எதற்கு இந்த வாட்பெட்.வாட்பெட் என்பது கதை எழுதவும் படிக்கவும் உதவும் ஒரு ஊடகம்.அதை ஏன் நாம் பேஸ்புக் ,வாட்ஸப் போன்று பாவிக்க வேண்டும்.கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்.என்னுடைய "ஆகாஷனா" கதை கூட அதை மையப்படுத்தியே எழுதுகின்றேன்.நிஜ பெயர் ,முகம் தெரியாத ஒரு வாட்பெட் யூசரால் ஒரு குடும்பம் எப்படி சின்னாபின்னமாக போகின்றது என்பதே கரு.
ஆண்களுக்கு எது நடந்தாலும் கவலையில்லை கையில் பட்ட தூசி போல துடைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.ஆனால் பெண்கள் அப்படியில்லை, சிறியதொரு விடயம் என்றாலும் அதை ஊதி பெரிதாக்கிவிடுவார்கள்.
இனி வரும் காலங்களில் உங்கள் சொந்த விபரங்கள் , வாழ்த்துக்களை பொது வெளியில் பகிர்வதை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து..
ஒரு வாழ்த்து தெரிவிப்பதில் என்ன நடந்து விட போகின்றது என கேட்பவர்களுக்கு......
சோஷியல் மீடியாவில் நடக்கும் அனாச்சாரங்கள், பழிவாங்கல்கள்,மோசமான செயற்பாடுகள் எல்லாம் எப்படி அரங்கேறுகின்றது என்று கொஞ்சம் அலசிப்பாருங்கள்..மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்தால் நமக்கு என்ன என்று சிலர் என்ன தோன்றும்.அந்த மற்றவர்கள் உங்களை பற்றி தவறாக பேசும் போது உங்கள் தாய் தந்தையரின் மனம் எவ்வளவு புண்படும் என்று ஒரு கனம் யோசித்தால் உங்களுக்கு இதன் தார்ப்பரியம் புரியும்.
இறுதியாக,எல்லோரும் எனக்கு அண்ணா என்று கூறி காமன்ட்ஸ் செய்வதாலேயே இந்த சிறிய சிந்தனை பதிவை இடுகின்றேன்.தவறெனில் மன்னிக்கவும்.உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளில் தலை இட்டிருப்பதாக யாருக்கும் தோன்றினால் இந்த பதிவை மறந்துவிடுங்கள்.
உங்களின் பிரைவசியை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும்..மற்றவர்களால் அறிவுரையே வழங்க முடியும்.
VOCÊ ESTÁ LENDO
ஆகாஷனா
Não Ficçãoமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...